கம்பராமாயணம் 9338 · யுத்த 29.39
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மற்று அவ்வாசகம் கேட்டலும் மாலியவான் வந்து - (வன்னி கூறிய) அச்சொல்லைக் கேட்டவுடனே மாலியவான் முன்வந்து; உற்ற தன்மையும், மனிதரது ஊற்றமும் - இது காறும் நடந்துள்ளவற்றின் தன்மையையும், மனிதர்களின் வலிமையையும், உடன் ஆம் கொற்ற வானரத் தலைவர் தம் தகைமையும் - அம்மனிதரோடு வந்துள்ள வெற்றி பொருந்திய வானரத் தலைவர் தம் பெருமையையும், கூறக்கிற்றும் கேட்டிரால் என்றனன் கிளத்துவான் துணிந்தான் - சொல்லும் வல்லமையுடையேம், கேட்பீர்களாக என்று சொல்லத் துணிந்தான்.
ஊற்றம் - வலிமை, கொற்றம் - வெற்றி கிற்றும் - ஆற்றலுடையேம் வலிமையுடையேம் கில் - ஆற்றலுணர்த்தும் இடைச்சொல். அதன் அடியாகப் பிறந்த 'கிற்றும்' என்பது தன்மைப் பன்மை வினைமுற்றாம். சொல்லுபவை இராவணனுக்குப் பிடிக்காதவையும், அவனது தோல்விகளுமாதலால் மாலியவான் சொல்லத் துணிந்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As soon as he heard those words, Māliyavāṉ came forward:
- "What has happened, the might of the men, and the worth
- of the victorious monkey chiefs who are with them, I am able
- to tell; so listen," he said, resolved to speak out.
What the poem says
Vaṉṉi's question is answered by Māliyavāṉ, Irāvaṇaṉ's elderly maternal grandfather and counsellor. He resolves to tell the plain truth about the enemy's strength, knowing it will displease Irāvaṇaṉ because it is a story of his defeats.