கம்பராமாயணம் 9341 · யுத்த 29.42

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நீர் இங்கு வந்து வினாயது என் - நீர் (இரு மனிதரின் ஆற்றலைப்பற்றி) இங்கு வந்து வினவியது என்? எறி திரைப் பரவை அங்கு வெந்திலதோ? - இராமனுடைய அக்கினிக்கணையால் அலை வீசுங்கடல் அங்கு வேகவில்லையோ? சிறிதும் அறிந்ததும் இலிரோ? - அது இராமனால் நிகழ்ந்தது என்பதைச் சிறிதும் அறிந்ததும் இல்லீரோ? கங்கை சூடிதன் கடுஞ்சிலை ஒடித்த அக்காலம் - கங்கையைச் சடையில் கொண்டுள்ள சிவனது கடுமையான வில்லை (இராமன் சீதையை மணக்கும் பொருட்டு) ஒடித்த அக்காலத்து; முழங்கு ஓதை உங்கள் வான் செவி புகுந்திலதோ? - (அவ்வில் ஒடிந்ததாலாய) முழங்கும் பேரொலியானது உங்களது சிறந்த செவியில் புகுந்திலதோ?

கடல் வெந்தமை கண்டும், வில்லொடித்த ஓசையைக் கேட்டும் இவற்றிற்குக் காரணம் தெரிந்திருக்க வேண்டிய நீர் இங்கு வந்து வினவுவது என்? என்கின்றான் மாலியவான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Why do you come here and ask? Did not the sea of dashing waves
  2. burn over there? Do you know nothing at all of it?
  3. At the time when the fierce bow of the one who wears the Gaṅgā was broken,
  4. did that roaring sound not enter your great ears?"

What the poem says

Māliyavāṉ rebukes the commanders. They should have known who the enemy was. When Irāmaṉ threatened the ocean with his fiery arrows to make it give way for his bridge, the sea burned; and when he broke Civaṉ's great bow to win Cītai's hand, the crash echoed through the worlds. How could they not have heard?

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'iṅku vantu nīr viṉāyatu eṉ? eṟi tiraip paravai
aṅku ventilatō? ciṟitu aṟintatum ilirō?
kaṅkaicūṭitaṉ kaṭuñ cilai oṭitta ak kālam,
uṅkaḷ vāṉ cevi pukuntilatō, muḻaṅku ōtai?