கம்பராமாயணம் 9344 · யுத்த 29.45

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1மூலத் தானை என்று உண்டு; அது மும்மைநூறு அமைந்த
கூலச்சேனை இவ் வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த
காலச் செய்கையான் நீர் வந்திராயின் அக்கழலோர்
சீலச் சேனையின் செய்வினைச் செய்கையும் தெரிவீர்.

பொருள் · Meaning in Tamil

மூலத்தானை என்று உண்டு - மூலபலப்படை என்ற ஒன்று உண்டு; அது மும்மை நூறு அமைந்த கூலச்சேனையின் வெள்ளம் - அது மூன்று நூறாக அமைந்த திரண்ட சேனையாகிய வெள்ளம்; மற்று அதற்கு இன்று குறித்த காலச்செய்கை நீர் வந்துளீர் - அப்படைக்கு இன்று போர் செய்யுமாறு குறிக்கப்பெற்ற காலத்தின் செயலால் (அதற்கு உதவியாக) நீவிர் வந்திருக்கின்றீர்கள்; இனி, தக்க கழலோர் சீலச் செய்கையும் - இனித்தகுதி அமைந்த கழல்களை அணிந்த வானரப் படைத்தலைவரின் ஒழுங்கமைந்த செய்கையையும்; கவிப்பெருஞ்சேனையும் தெரிக்கில் - மிகுந்த குரங்குப்படையின் தன்மையையும் கூற வேண்டின்.

முந்நூறு வெள்ளம் மூலத்தானை போர் செய்ய வேண்டிய நாள் இன்று ஆதலின் அத்தானைக்குத் துணையாக நீவிர் வந்துளீர் என்றவாறு. மும்மை நூறு - முந்நூறு கூலம் - திரட்சி. தக்க கழலோர் - வானரப் படைத்தலைவர். சீலம் - ஒழுங்கு. கவி - குரங்கு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "There is what is called the Mūla army; it is a flood
  2. of massed troops numbering three hundred vellams; and for its
  3. appointed time today you have come; now, if one were to tell of the conduct
  4. of their fitting heroes with anklets, and their mighty great host..."

What the poem says

One last reserve remains: the Mūlapalam, Irāvaṇaṉ's core army of three hundred veḷḷams, and today is the day fixed for it to fight. The commanders have arrived to support it. Māliyavāṉ now turns to describe the monkey commanders and their army.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mūlat tāṉai eṉṟu uṇṭu; atu mummai nūṟu amainta
kūlac cēṉaiyiṉ veḷḷam; maṟṟu ataṟku iṉṟu kuṟitta
kālac ceykai nīr vantuḷīr; iṉi, takka kaḻalōr
cīlac ceykaiyum, kalip peruñ cēṉaiyum, terikkil.