கம்பராமாயணம் 9345 · யுத்த 29.46

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஒருகுரங்கு வந்து இலங்கையை மலங்கு எரி ஊட்டி,
திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து,
பொருது, தூது உரைத்து, ஏகியது, அரக்கியர் புலம்ப,
கருகு சேனைமாக் கடலையும்; கடலையும் கடந்து.

பொருள் · Meaning in Tamil

ஒரு குரங்கு வந்து இலங்கையை மலங்கு எரியூட்டி - ஒரு குரங்கு வந்து இலங்கையைக் கலங்குதற்குக் காரணமான தீயை மூட்டி; திருகு வெஞ்சினத்து அக்கனை நிலத்தொடும் தேய்த்து - மாறுபட்ட சினத்தினை உடைய அக்க குமாரனையும் நிலத்தோடு தேய்த்துக் கொன்று; பொருது, தூதுரைத்து அரக்கியர் புலம்ப - போர் செய்து, தூது சொல்லி அரக்கியர் புலம்புமாறு; கருது சேனையாம் கடலையும் கடலையும் கடந்து ஏகியது - மதிக்கத்தக்க, சேனையாகிய கடலையும், பெரிய கடலையும் கடந்து சென்றது.

ஒரு குரங்கு - அனுமன். மலங்கு எரி - கலங்குதற்குக் காரணமாகிய தீ, அக்கன் - அக்ககுமாரன், இராவணன் மகன். குரங்குதானே என எள்ளிய படைத்தலைவர்க்கு அதன் வலிமை கூறினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "A single monkey came and set Ilaṅkai ablaze with a fire that threw it into confusion,
  2. ground Akkaṉ of twisted, fierce wrath into the earth,
  3. fought, delivered his message, and went away while demon women wailed,
  4. crossing the sea of an army to be reckoned with, and the sea as well."

What the poem says

To those who sneer at monkeys, Māliyavāṉ points to Aṉumaṉ. On his first visit, alone, he set Ilaṅkai on fire, crushed Irāvaṇaṉ's son Akkaṉ (Akṣa Kumāra) into the ground, fought, delivered Irāmaṉ's message, and then crossed back over both a sea of demon soldiers and the real sea.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1oru kuraṅku vantu ilaṅkaiyai malaṅku eriyūṭṭi,
tiruku veñ ciṉattu akkaṉai nilattoṭum tēyttu,
porutu, tūtu uraittu, ēkiyatu, arakkiyar pulampa,
karutu cēṉaiyām kaṭalaiyum; kaṭalaiyum kaṭantu.