கம்பராமாயணம் 9346 · யுத்த 29.47

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1கண்டிலீர் கொலாம், கடலினை மலைகொண்டு கட்டி,
மண்டு போர்செய, வானரர் இயற்றிய மார்க்கம்?
உண்டு வெள்ளம் ஓர் எழுபது; மருந்து ஒரு நொடியில்
கொண்டு வந்தது, மேருவிற்கு அப்புறம் குதித்தே.

பொருள் · Meaning in Tamil

மண்டு போர் செய, கடலினை மலை கொண்டு கட்டி - நெருங்கிப் போர் செய்யும் பொருட்டு கடலினை மலை கொண்டு அடைத்துக் கட்டி; வானரர் இயற்றிய மார்க்கம் கண்டிலீர் கொலாம் - (நீவிர் இகழ்ந்து கூறிய) குரங்குகள் ஏற்படுத்திய சேதுவாகிய வழியினைக் கண்டிலீரோ? ஓர் எழுபது வெள்ளம் உண்டு - பகைவரிடம் (இந்த வல்லமையுள்ள குரங்குகள் கொண்ட) ஓர் எழுபது வெள்ளம் சேனை உளது; மேருவுக்கு அப்புறம் குதித்து மருந்து ஒரு நொடியில் கொண்டு வந்தது - (அப்படையில் ஒரு குரங்கு) மேரு மலைக்கு அப்புறத்தே குதித்து ஒரு நொடிப் பொழுதில் (உயிரைத் தருகின்ற) மருந்தினைக் கொண்டு வந்தது.

மார்க்கம் - வழி. இங்கு சேதுவைக் குறித்தது, கொலாம் - கொல் ஐயம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Have you not seen the road the monkeys built, binding the sea
  2. with mountains so as to come and wage close battle?
  3. There are seventy vellams of them; one leapt beyond Mēru
  4. and in a single instant brought back the healing herb."

What the poem says

Māliyavāṉ continues. The monkeys the commanders despise built a causeway across the ocean out of mountains, and there are seventy veḷḷams of them. One of them, Aṉumaṉ, leapt beyond Mount Mēru and in a moment brought back the life-giving herb that revived the fallen.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭilīrkolām, kaṭaliṉai malai koṇṭu kaṭṭi,
maṇṭu pōr ceya, vāṉarar iyaṟṟiya mārkkam?
uṇṭu veḷḷam ōr eḻupatu; maruntu oru noṭiyil
koṇṭu vantatu, mēruvukku appuṟam kutittu.