கம்பராமாயணம் 9347 · யுத்த 29.48

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

இது இயற்கை; ஓர் சீதை என்று இருந்தவத்து இயைந்தாள் - இது பகைவர்தம் சேனையின் இயல்பு; ஒப்பற்ற சீதை என்று மிக்க தவத்துடன் கூடியவளான; பொது இயற்கை தீர் கற்புடைப் பத்தினி பொருட்டால் - பொது இயற்கையொழிந்த (பிறர் எவர்க்கும் இல்லாது தனக்கே சிறப்பாக அமைந்த) கற்பினை உடைய ஒரு பத்தினியை முன்னிட்டு; விதி விளைத்தது; அவ்வில்லியர் வெல்க, நீர் வெல்க - விதியே (இத்தகு பகையை) விளைவித்தது. அந்த வில்லாளர்களே வெற்றி பெறுக (அன்றி) நீர் வெற்றி பெறுக; முதுமொழிப்பதம் சொல்லினென் என்று உரை முடித்தான் - முதுவோர் மொழிதற்குரிய சொல்லைச் சொன்னேன் என்று மாலியவான் தன் உரையை முடித்துக் கொண்டான்.

இது இயற்கை எனப் பகைப் படையின் தன்மையைக் கூறியவன் இப்போர் ஒப்புவமையற்ற ஓர்கற்புடைப் பெண்ணின் பொருட்டால் விதி கூட்ட விளைந்துள்ளது. இதில் அவர்களே வெல்வர் என்ற கருத்தை உடையவனாயினும் நிலமைக்கேற்ப அவரே வெல்க அல்லது நீவிரே வெல்க எனப் பொதுவாகக் கூறித்தான் அனுபலங்களாலும் வயதாலும் முதிர்ந்தவனாதலின் தன்னுரையினை முதுமொழி எனக் குறிப்பிட்டு மாலியவான் உரை முடிக்கின்றான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Such is the case; for the sake of one called Cītai, endowed with great austerity,
  2. a faithful wife whose chastity is beyond the common nature,
  3. Fate has brought this about; may those archers win! May you win!
  4. I have spoken the words of the old," and so he ended his speech.

What the poem says

Māliyavāṉ closes carefully. This whole war was brought about by fate for the sake of Cītai, a woman of unique chastity. He clearly believes the archers will win, but tactfully wishes victory to both sides alike, "may they win, may you win", and calls his advice the plain speech of an old man.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'itu iyaṟkai; ōr cītai eṉṟu iruntavattu iyaintāḷ
potu iyaṟkai tīr kaṟpuṭaip pattiṉi poruṭṭāl,
viti viḷaittatu av villiyar velka! nīr velka!
mutumoḻip patam colliṉeṉ' eṉṟu urai muṭittāṉ.