கம்பராமாயணம் 9348 · யுத்த 29.49

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1வன்னி, மன்னனை நோக்கி, 'நீ இவர் எலாம் மடிய,
என்ன காரணம், இகல் செயாது இருந்தது? 'என்று இசைத்தான்;
'புன்மை நோக்கி நான் நாணினன் பொருதிலன் 'என்றான்!
'அன்னதேல், இனி அமையும் எம் கடன் அஃது 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

வன்னி, மன்னனை நோக்கி, இவர் எலாம் மடிய - வன்னி, இராவணனை நோக்கி 'இவரெலாம் மடிந்து போகவும்; நீ இகல் செயாதிருந்தது என்ன காரணம்? என்று இசைத்தான் - நீ போர் செய்யாதிருத்தற்கு என்ன காரணம்? என்று வினவினான்; புன்மை நோக்கினன்; நாணினால் பொருதிலேன்' என்றான் - (மனிதரையும் குரங்குகளையும் எதிர்த்துப் போர் செய்தலாகிய) இழிவை நோக்கி, வெட்கத்தால் போர் செய்யவில்லை' என்று இராவணன் (அதற்குக்) கூறினான்; 'அன்னதேல், இனி எம் கடமை அஃது அமையும்' என்றான் - அவ்வாறாயின் அவரோடு போர் செய்வது எம் கடமையாக அமையும் என வன்னி கூறினான்.

முதல் நாளே போருக்குப் போய்ப் பட்ட புன்மை காரணமாக ஏற்பட்ட நாணத்தினால் பொருதிலேன்;" என்ற பொருளும் அமைந்திருத்தல் காண்க, இங்கு இராவணன் தான் முதல் நாளே போருக்குப் போய்த் தோற்று வந்ததனை மறைத்துக்கொண்டு பொய் கூறுகின்ற அளவுக்குத் தாழ்ந்து போகின்ற நிலையினைக் காணுகின்றோம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Vaṉṉi, looking at the king, said, "While all these died,
  2. what was the reason you did not do battle?"
  3. "I saw how petty it was; out of shame I did not fight," he said.
  4. "If that is so, then that duty now falls to us," he said.

What the poem says

Vaṉṉi asks why Irāvaṇaṉ himself has not fought while all his warriors died. Irāvaṇaṉ claims it was beneath him to fight mere men and monkeys. The commentary points out that this is a lie: he fought on the first day and was humiliated, so the shame he speaks of was really his own defeat. Vaṉṉi replies that the commanders will take on the fight.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaṉṉi, maṉṉaṉai nōkki, 'nī ivar elām maṭiya,
eṉṉa kāraṇam, ikal ceyātiruntatu? 'eṉṟu icaittāṉ;
'puṉmai nōkkiṉeṉ nāṇiṉāl porutilēṉ 'eṉṟāṉ!
'aṉṉatēl, iṉi amaiyum em kaṭamai aḵtu 'eṉṟāṉ.