கம்பராமாயணம் 9349 · யுத்த 29.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மூது உணர்ந்த இம்முதுமகன் கூறிய முயற்சி - பழையனவற்றை உணர்ந்த இம்முதியவன் மாலியவான் கூறிய முயற்சிப்பயன்; சீதை என்பவள் தனைவிட்டு அம்மனிதரைச் சேர்தல் - சீதை என்பவளைச் சிறையிலிருந்து விடுத்து அம்மனிதரைச் சேர்வது என்பதாகும்; ஆதியின் தலை செயத்தக்கது - அது, முன்னமே தொடக்கத்தில் செய்யத்தக்க செயல் ஆகும்; காதல் இந்திரசித்தையும் மாய்வித்தல் கண்டும், இனிச் செயல் அழிவால் - அன்பிற்குரிய இந்திரசித்தினையும் பகைவர் கொல்லக்கண்டும் இனி அவ்வாறு செய்வது நமது புகழுக்கு இழிவாகும்.
'மாலியவான் வெளிப்படையாகச் சீதையை விட்டுவிடலாமெனக் கூறவில்லையாயினும் அவன் சொன்னதைக் கொண்டு அதன் பின்னணியாகிய அவன் கருத்தை உணர்ந்த வன்னி, அக்கருத்தின்படி சீதையை விட்டுவிட்டுச் சமாதானமாகப் போதல் என்பது தொடக்கத்திலேயே செய்ய வேண்டியசெயலாம். அங்ஙனம் செய்திருப்பின் கும்பகன்னன், அதிகாயன் முதலான வீரர்களும், அரக்கர் படையும் அழிந்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்பிற்கினிய இந்திர சித்துவும் பகைவர்களால் கொல்லப்பட்ட நிலையில் அப்படிச் செய்வது அரக்கர் குலம் இதுவரையும் தேடிய வீரப்பண்பாகிய பெருமைக்கு அழிவைத் தருவதாகும் என்றான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The course this old man of ancient wisdom has spoken of,
- letting go of the one called Cītai and making peace with those men,
- was what should have been done at the very start; to do it now would be ruin,
- after we have seen even beloved Intiracittu put to death."
What the poem says
Vaṉṉi reads the advice behind Māliyavāṉ's guarded words: give Cītai back and make peace. That would have been right at the start, he says, before Kumpakaruṇaṉ, Atikāyaṉ and so many others died. Now, after Intiracittu's death, surrender would destroy the demon race's hard-won reputation for valour.