கம்பராமாயணம் 9351 · யுத்த 29.52

Section யுத்த காண்டம் / 29. படைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என்று, எழுந்தனர் இராக்கதர் நீ இருக்க யாமே சென்று - என்று சொல்லிப் படைத் தலைவராகிய இராக்கதர்கள் எழுந்தவர்களாய் (இராவணனை நோக்கி) நீ இங்கு இருப்பாயாக யாங்களே சென்று; மற்றவர் சில் உடல் குருதி நீர் தேக்கி வென்று மீளுதும் - அப்பகைவரின் சிறிய உடலில் உள்ள இரத்தத்தைக் குடித்து வென்று மீளுவோம்; வெள்குதுமேல், மிடல் இல்லாப் புன்தொழில் குலம் ஆதும்' - அவர்களுக்கு நாணிப் பின்வாங்குவோமாயின் வலிமை இல்லாத சிறுதொழில் செய்யும் குலத்தவர் ஆவோம் என்று உரைத்தனர் போனார் - என்று கூறியவர்களாய்ப் போயினர்.

சில் உடல் - சிறிய உடல் - அரக்கரை நோக்கச் சிற்றுடல் பெற்றவர் மனிதர். வெள்குதல் இங்கு நாணிப் பின்வாங்குதலைக் குறித்தது. மிடல் - வலிமை. புன்தொழில் - வலிமையற்ற சிறு தொழில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. So saying, the Rākṣasas rose: "Stay here, you; we ourselves
  2. will go, and drink up the blood of those others' puny bodies,
  3. and come back victorious; if we shrink back, we shall become
  4. a race of strengthless, menial trades," they said, and went.

What the poem says

The commanders rise and tell Irāvaṇaṉ to stay behind: they will go, drink the blood of these puny humans and return as victors. If they hang back, they will deserve to be counted among the weak and lowly. With this boast they leave, and the next chapter, the destruction of the Mūlapalam army, begins.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eṉṟu, eḻuntaṉar irākkatar,' irukka nī; yāmē
ceṉṟu, maṟṟavar cil uṭal kuruti nīr tēkki,
veṉṟu mīḷutum; veḷkutumēl, miṭal illāp
puṉ toḻil kulam ātum 'eṉṟu uraittaṉar pōṉār.