கம்பராமாயணம் 9352 · யுத்த 30.1
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தானவப் பெருங் கரிகளை - அசுரராகிய பெரிய யானைகளை; வாள் கொண்டு தடிந்தான் - வாளினைக் கொண்டு துணித்தவனாகிய இராவணன் (சேனைத் தலைவர்களை நோக்கி); யான் ஒருவழி சென்று - நான் ஒரு புறமாகப் போய்; வானரப் பெருஞ்சேனையை - வானரப் பெரும்படைகளை; ஊன் அறக் குறைத்து - உடல்கள் சிதையும்படி வெட்டி; உயிர் உண்பென் - உயிரைக் குடிப்பேன்; நீயிர் ஒருங்கே போய் - நீங்கள் யாவரும் ஒன்றாகச் சென்று; மற்றவர் ஆன இருவரை - வானரர் தவிர இராம இலக்குவராகிய இருவரை கோறிர் - கொல்லுவீர்களாக; என்று அறைந்தான் - என்று கட்டளை இட்டான்.
தானவர் - அரக்கரில் ஓர் இனத்தார் இராவணன் இவர்களை அழித்த செய்தி உத்தரகாண்டத்துள் பேசப்படுகிறது என்பர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "I shall go by one way against the great monkey army
- and hack their flesh to pieces and drink their lives; you go, all together,
- and kill those other two," so he declared,
- he who had cut down the great mountain-like Tāṉavas with his sword.
What the poem says
The Mūlapalam chapter begins. Irāvaṇaṉ, who once cut down the mighty Dānava demons with his sword, divides the attack: he himself will slaughter the monkey army from one side, while the commanders all together go after Irāmaṉ and Ilakkuvaṉ.