கம்பராமாயணம் 9353 · யுத்த 30.2
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
என உரைத்தலும் - மேற்கண்டவாறு இராவணன் கட்டளை இட்டவுடனே; எழுந்து - புறப்பட்டு; தம் இரதம் மேல் ஏறி - தங்களுக்குரிய தேர்களில் ஏறி; கனை திரைக் கடல் சேனையைக் கலந்தது காணா - ஒலிக்கும் கடல்மேல் பரந்த தம் சேனைகளோடு அரக்கத் தலைவர்கள் சென்று சேர்ந்ததைக் கண்டு; வினையம் மற்று இலை - இனிச் செய்யத்தக்க பணி வேறு இல்லை; மாமூலத் தானையை - பெரிதாகிய மூல பல சேனையை; இனையர் முன் விரைவோடு செல ஏவுக என்று - இப்போது போருக்குப் போகின்ற இவர்களுக்கு முன்னே வேகமிகச் செல்லும்படியாக ஏவுவீர்களாக என்று; இராவணன் இசைத்தான் - இராவணன் (மேலும்) கட்டளை இட்டான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- When he had spoken thus, they rose and mounted their vehicles;
- seeing them merge with their army like the roaring, wave-tossed sea,
- "There is nothing else to do; send the great Mūla army
- swiftly to go before these," Irāvaṇaṉ declared.
What the poem says
The commanders mount their chariots and rejoin their sea-like armies. Seeing them ready, Irāvaṇaṉ orders the Mūlapalam, his great ancestral core army, to march at once ahead of them.