கம்பராமாயணம் 9354 · யுத்த 30.3

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஏவி அப்பெருஞ் சேனையை, தானும் வேட்டு எழுந்தான்,
தேவர் மெய்ப் புகழ் தேய்த்தவன், சில்லி அம் தேர்மேல்,
காவல் மூவகை உலகமும் முனிவரும் கலங்க,
பூவை வண்ணத்தன் சேனைமேல் ஒருபுறம் போனான்.

பொருள் · Meaning in Tamil

அப்பெருந்தானையை ஏவி - அந்தப் பெரிய மூலபலச் சேனையை இராமனை எதிர்த்தழித்திடுமாறு ஏவியபின்; தேவர் மெய்ப்புகழ் தேய்த்தவன் - தேவர்களின் மெய்யான புகழை அழித்தவனாகிய இராவணன்; வேட்டு - போர் செய்தலை விரும்பி; சில்லி அம் தேர்மேல் - சக்கரங்கள் கொண்ட அழகிய தேர் மீது; தானும் எழுந்தான் - தானும் ஏறியவனாய்; காவல் மூவகை உலகமும் - தன் ஆட்சியில் உள்ள மூன்று உலகத்தவரும்; முனிவரும் - முனிவர்களும்; கலங்க - மனம் கலங்கும்படியாக; பூவை வண்ணத்தன் சேனைமேல் - பூவைப் பூவின் நிறம் கொண்டவனாகிய இராமனுக்கு உதவியாக வந்த சேனையை எதிர்த்து; ஒரு புறம் போனான் - (மூலபலப்படை ஒருபுறம் போக) தான் வேறு ஒரு பக்கம் போனான்;

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Having sent off that great army, he too rose, eager for battle,
  2. he who had worn away the true fame of the gods, upon his fine wheeled chariot,
  3. so that the three worlds under his rule and the sages trembled,
  4. and went on one side against the army of the one with the hue of the pūvai flower.

What the poem says

Having launched the Mūlapalam, Irāvaṇaṉ, who had crushed the gods' glory, mounts his chariot himself, eager to fight, and the three worlds and the sages tremble. While the Mūlapalam goes one way, he goes by another route against the monkey army of Irāmaṉ, whose skin is dark like the pūvai (kāyā) flower.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ēvi ap perun tāṉaiyai, tāṉum vēṭṭu eḻuntāṉ,
tēvar meyp pukaḻ tēyttavaṉ, cilli am tērmēl,
kāval mūvakai ulakamum muṉivarum kalaṅka,
pūvai vaṇṇattaṉ cēṉaimēl oru puṟam pōṉāṉ.