கம்பராமாயணம் 9355 · யுத்த 30.4
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
1'எழுக, சேனை " என்று, யானைமேல் அணிமுரசு எற்றி,
வழு இல் வள்ளுவர் துறைதொறும் விளித்தலும், வல்லைக்
குழுவி ஈண்டியது என்பரால், குவலயம் முழுதும்
தழுவி, விண்ணையும் திசையையும் தடவும் மாத் தானை.
பொருள் · Meaning in Tamil
வழு இல் வள்ளுவர் - தம் கடமையில் குற்றம் இல்லாத (முரசறையும்) வள்ளுவன்மார்; யானை மேல் மணி முரசு எற்றிக் - யானை மீது இருந்த அழகிய முரசுகளை அறைந்து; எழுக சேனை என்று - சேனைகள் எழுவதாக என்று; குவலயம் முழுதும் தழுவி - உலகம் முழுவதையும் அளாவி; விண்ணையும் திசையையும் தடவும் மாத்தானை - ஆகாயத்தையும் திசைகளையும் வருடுகின்ற பெரிய (மூலபலச்) சேனையானது; வல்லை - விரைவாக; ஈண்டியது என்பர் - கூடியது என்பர்.
ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Let the army rise!" so, beating the jewelled drums on elephants,
- as the faultless drummers called out at every quarter, swiftly
- it gathered and massed, they say, covering the whole earth,
- the vast army that brushed the sky and the directions.
What the poem says
Royal drummers, faultless in their duty, beat the war drums on elephant-back throughout the city, calling the army to rise. At once the Mūlapalam gathers, so vast that it covers the earth and seems to brush the sky and the horizons.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'eḻuka, cēṉai "eṉṟu, yāṉaimēl maṇi muracu eṟṟi,
vaḻu il vaḷḷuvar tuṟaitoṟum viḷittalum, vallaik
kuḻuvi īṇṭiyatu eṉparāl, kuvalayam muḻutum
taḻuvi, viṇṇaiyum ticaiyaiyum taṭavum māt tāṉai.