கம்பராமாயணம் 9356 · யுத்த 30.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அண்டத்தின் அகத்து வேலைகள் அடங்கும் - அண்டத்தின் எல்லைக்குள்ளே கடல்கள் அடங்க நிற்கும்; அகல் மலையும் மன் உயிர் அனைத்தும் அடங்கும் - பெரியனவாய் விரிந்த மலைகளும் நிலைபேறுடைய எல்லா உயிர்களும் (அவ்வாறே) அண்டத்தின் எல்லையுள் அடங்கி நிற்கும்; அவ் வரைப்பின் அவை போல் - அந்த (அண்டத்து) எல்லையுள் அவை அடங்குதல் போல; அடங்கும் மாயவன் குறள் உருத் தன்மையின் அல்லால் - யாவும் அடங்குமாறு ஓங்கிய திருமாலின் வாமன உருவினுள் யாவும் அடங்கிவிடும் தன்மை கொண்டதுபோல் அல்லாமல்; அப்பெரும்படை அரக்கர் தம் யாக்கை அடங்குமே - அந்தப் பெரிய படை கொண்ட அரக்கர்களின் பேருருவம் அடங்கிவிடுமோ? (அடங்காது என்றபடி).
ஆங்கிலம் · English translationAI
Translation
- The seas are contained, and the wide mountains within the universe
- are contained, and all living beings within its bounds; like them
- could the bodies of the demons of that great army be contained,
- except in the manner of Māyavaṉ's dwarf form, in which all is contained?"
What the poem says
The universe can hold its oceans, mountains and living beings, but it could not hold the bodies of the Mūlapalam demons, unless in the way that Tirumāl's Dwarf incarnation held everything. As Vāmaṉa, he seemed small but grew to span the whole cosmos in three strides. The army is too vast for the universe itself.