கம்பராமாயணம் 9357 · யுத்த 30.6
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அறத்தைத் தின்று - (அந்த மூலபலத்தைச் சேர்ந்த அரக்க வீரர்கள்) அறத்தையே உணவாகத் தின்று; அருங் கருணையைப் பருகி - (அந்த உணவுக்கு ஏற்ப) அரிய கருணையையே நீராகக் குடித்து; வேறு அமைந்த - (அறத்துக்கு) மாறாக அமைந்ததாகிய; மறத்தைப் பூண்டு - மறநெறியையே மேற்கொண்டு; வெம் பாவத்தை மணம் புணர் மணாளர் - கொடிய பாவத்தையே மணம் செய்து சேரும் மாப்பிள்ளைகளாய்; நிறத்துக் கார் அன்ன நெஞ்சினர் - நிறத்தினால் மேகத்தை ஒத்த கரிய நெஞ்சகத்தை உடையவர்களாய்; நெருப்புக்கு நெருப்பாய் - சேர்ந்தவர்களை எறிக்கும் இயல்புடைய நெருப்புக்கு நெருப்புப் போன்ற சினமுடையவர்களாய்; புறத்தும் பொங்கிய பங்கியர் - (அகத்தில் உள்ள சின நெருப்புக்கு அடையாளமாய்) வெளியே விரிந்து தோன்றும் செம்முடியுடையவராய்; காலனும் புகழ்வார் - (கொல்லுதலில்) யமனாலும் புகழப்படுவோராய் விளங்கினர்.
அரக்கரை மணவாளப் பிள்ளைகளாகக் கூறியதற்கு ஒப்ப, 'மறத்தைப் பூண்டு' என்ற தொடருக்கு மறத்தையே அழகு செய்யும் அணிகளாகப் பூண்டு எனவும் பொருள் கொள்ளலாம். இப்பாடலில் வரும் வருணனை படிமக் (இமேஜரி) களஞ்சியமாக உள்ளது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Devouring dharma, drinking down rare compassion, wearing
- violence, which is its opposite, bridegrooms wedded to fierce sin,
- with hearts like dark clouds in colour, fire to fire itself,
- with hair flaring out on the outside too, even Death would praise them.
What the poem says
A portrait of the Mūlapalam demons in a string of bold metaphors. They eat righteousness as food and drink compassion as water, wear cruelty as their ornament, and are married to sin like bridegrooms. Their hearts are black as storm clouds, their anger would scorch fire itself, and their flame-red hair bristles as a sign of the fire within. Even Yama admires them as killers.