கம்பராமாயணம் 9358 · யுத்த 30.7
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நீண்ட தாள்களால் வேலையைப் புறம் செல நீக்கி - தங்கள் நீண்ட கால்களால் கடல் நீரை அப்பாற் செல்லும்படி போக்கி; வேண்டும் மீனொடு மகரங்கள் - வேண்டிய அளவு மீன்களோடு மகரப்பெரு மீன்களையும்; வாயிட்டு விழுங்கி - வாயில் போட்டு விழுங்கி, தூண்டுவான் உரும் ஏற்றினை - (மேகங்களால்) உண்டாக்கப்படுகின்ற பேரிடிகளை; செவிதொறும் தூக்கி - காதுகளிலெல்லாம் தொங்க விட்டுக்கொண்டு; மூண்டவான் மழை - திரண்டெழுந்து வருகின்ற பெரிய மேகங்களை; உரித்து உடுத்து - பிய்த்து ஆடையாக உடுத்துக்கொண்டு; உலா வரும் மூர்க்கர் - எங்கணும் உலவி வருவர் அந்த முருடர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Pushing the sea aside with their long legs,
- putting in their mouths and swallowing fish and makaram as they please,
- hanging the crashing thunderbolts from the sky on each ear,
- stripping the massed great clouds to wear as cloth, the brutes go roaming.
What the poem says
Grotesque images of the demons' size. They wade through the ocean pushing it aside with their legs, gulp down fish and sea monsters (makaram) by the mouthful, wear thunderbolts as earrings and strip storm clouds to wrap round themselves as clothes.