கம்பராமாயணம் 9359 · யுத்த 30.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மால்வரைக் குலம் பரல் என - பெரிய மலைக் கூட்டங்களே உட்பரலாக அமைய, மழைக்குலம் சிலம்பா - மேகக் கூட்டங்களே காலில் அணியும் சிலம்புகளாக; கால் வரை - கால்களாகிய பெருமலைகளில்; பெரும்பாம்பு கொண்டு அசைத்த பைங்கழலார் - பெரிய பாம்பு கொண்டு கட்டிய பசும் பொன் கழல் அணிந்தவர்கள் (அவ் அரக்கர்கள்); மேல்வரைப் படர் கலுழன் - விண்ணக எல்லை வரை பறந்து செல்லும் கருடனால் எழுப்பப்படுகின்ற; வன் காற்று எனும் விசையோர் - வலிய காற்றுப் போன்ற வேகத்தை உடையவர்கள்; நால் வரைக் கொணர்ந்து - தொங்கி அசைகின்ற (துதிக்கை கொண்ட) மலையனைய யானைகளைக் கொண்டுவந்து; உடன் பிணித்தால் அன்ன நடையார் - ஒன்றாகக் கட்டியது போன்ற நடையை உடையவர்கள்.
நால்வரை கொணர்ந்து எனற் பாலது நால்வரைக் கொணர்ந்து என வந்தமை முந்தைய வரிகளில் அமைந்த ஓசையைப் பேணும் நயத்திற்காக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With ranges of great mountains as the pellets and masses of clouds as the anklets,
- they wear golden warrior-rings tied on their mountain-legs with great serpents;
- with speed like the strong wind of Kaluḻaṉ as he presses through the sky above;
- with a gait as if hanging-trunked mountains had been brought and tied together.
What the poem says
More hyperbole. Their anklets are storm clouds with whole mountain ranges rattling inside as the pellets, and their warrior-rings are tied on with huge snakes. They move as fast as the wind from the wings of Kaluḻaṉ (Garuḍa), and they walk with the heavy tread of elephants, "hanging mountains", lashed together.