கம்பராமாயணம் 9360 · யுத்த 30.9
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உண்ணும் தன்மைய ஊன் முறை தப்பிடின் - உண்ணுதற்கு உரிய தசைகள் உரிய நேரத்தில் கிடைக்காமல் போனால்; உடனே மண்ணில் நின்ற மால் யானையை வாயிடும் பசியார் - மண் மீது நிற்கின்ற பெரிய யானைகளை உடனே வாய்க்குள் போட்டுக் கொள்கின்ற பசியை உடையவர்கள் (அந்த அரக்கர்கள்); தண் இன் நீர்முறை தப்பிடின் - குளிர்ந்த இனிய நீர் குடிப்பதற்கு உரிய நேரத்தில் கிடைக்காமல் தடைப்பட்டால்; தடக் கையால் தடவி - பெரிய கைகளால் ஆகாயத்தைத் தடவி; விண்ணின் மேகத்தை வாரி - அவ் ஆகாயத்திலே படர்கின்ற மேகத் திரள்களை அள்ளி; வாய்ப் பிழிந்திடும் விடாயர் - தங்கள் வாயிலே பிழிந்திடுகின்ற நீர் வேட்கை உடையவர்கள் அவர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If the flesh they ought to eat fails to come at its time, at once
- they are so hungry they put into their mouths the great elephants standing on the earth;
- if the cool water fails to come at its time, they stroke with their huge hands
- and scoop the clouds of the sky and wring them into their mouths, so great is their thirst.
What the poem says
The demons' appetite. If their meal of meat is late they swallow whole elephants, and if their drinking water is late they grab rain clouds from the sky and wring them out into their mouths.