கம்பராமாயணம் 9361 · யுத்த 30.10

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உறைந்த மந்தரம் முதலிய கிரிகளை - திண்ணெனச் செறிந்த மந்தரம் முதலிய மலைகளை; உருவ எறிந்து - ஊடுருவும்படியாக தங்கள் வேலால் தாக்கி; வேல் நிலை காண்பவர் - தாங்கள் ஏந்திய வேற்படையின் கூர்மையைப் பரிசோதித்து அறிபவர்கள் அந்த அரக்கர்கள்; இந்துவால் யாக்கை சொறிந்து - சந்திரனைப் பற்றி தங்கள் உடம்பைச் சொறிந்து; தீர்வு உறு தினவினர் - தங்கள் உடல் தினவைத் தீர்த்துக் கொள்பவர்கள்; மலைகளைச் சுற்றி அறைந்து - கையில் அகப்படும் மலைகளைச் சுழற்றி மோதி; கற்ற மாத் தண்டினர் - பயிற்சி செய்யும் கதாயுதங்களைப் பயன்படுத்தியவர்கள்; அசனியின் ஆர்ப்பர் - இடிபோல முழங்குவார்கள்.

திருப்பாற்கடலைக் கடைவதற்குத் தேவர்கள் முதலியோர் பலரும் ஒன்றாகத் திரண்டு பற்றிப் பயன்படுத்திய மந்தரமலையையே தன் தோளுக்கு ஏற்ற கதாயுதம் என இரணியன் எடுத்தான். எடுத்தவன் 'இது நொய்ம்மையானது' எனக் கைவிட்டான். இக்கருத்தினை (கம்ப. 6199) கம்பர் பாடுவார். இச்செய்யுளோடு அதனை ஒப்பிட்டு நயம் உணர்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They test the temper of their spears by hurling them right through
  2. solid mountains like Mantaram; they scratch their bodies with the moon
  3. to relieve their itch; with great maces practised by whirling and pounding
  4. the mountains, they roar like the thunderbolt.

What the poem says

The demons test their spears by hurling them clean through mountains like Mantaram, the peak used to churn the milk ocean. They scratch their itches with the moon, train with maces by smashing mountains, and roar like thunder. The commentary compares Kampaṉ's earlier description of Iraṇiyaṉ, who picked up Mount Mantaram as a mace and threw it away as too light.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1uṟainta mantaram mutaliya kirikaḷai uruva
eṟintu, vēl nilai kāṇpavar; intuvāl yākkai
coṟintu, tīrvu uṟu tiṉaviṉar; malaikaḷaic cuṟṟi
aṟaintu, kaṟṟa māt taṇṭiṉar; acaṉiyiṉ ārppār.