கம்பராமாயணம் 9362 · யுத்த 30.11
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சூலம் வாங்கிடின் - சூலாயுதத்தைக் கையில் எடுத்தாலும்; சுடர் மழு எறிந்திடின் - ஒளி வீசும் மழுவாயுதம் கொண்டு தாக்கினாலும்; சுடர் வாள் கோல வெஞ்சிலை பிடித்திடின் - ஒளிர்கின்ற வாளினையும் அழகிய கொடிய வில்லையும் கையில் பிடித்தாலும்; கொற்றவேல் கொள்ளின் - வெற்றி வேலைக் கையிலே கொண்டாலும்; சால வன் தண்டு தரித்திடின் - மிக வலிய கதாயுதத்தைத் தாங்கினாலும், சக்கரம் தாங்கின் - சக்கராயுதத்தைத் தாங்கினாலும்; காலன், மால், சிவன், குமரன் என்று இவரையும் - யமன், திருமால், சிவபிரான், முருகன் என்ற இவர்களையும்; கடப்பார் - போரில் வென்று மேம்படுவர் அவ் அரக்கர்கள்.
இவரையும் என்பதில் உம்மை, உயர்வு சிறப்பு.
ஆங்கிலம் · English translationAI
Translation
- If they take up the trident, if they hurl the blazing axe, if they grasp the bright sword
- or the fair and cruel bow, if they seize the conquering spear,
- if they bear the mighty mace, if they hold the discus,
- they would overcome even these: Kālaṉ, Māl, Civaṉ and Kumaraṉ.
What the poem says
The poet is describing the Mūlapalam, the vast reserve army of demons that Irāvaṇaṉ has summoned from the ends of the worlds to fight Irāmaṉ. Each weapon named in the first three lines belongs to a god: the trident to Civaṉ, the axe also to Civaṉ, the spear to Kumaraṉ (Murukaṉ), the mace to Kālaṉ (Yama), the discus to Māl (Viṣṇu).
Whatever weapon these demons take up, they could defeat even the god who owns it. The "even" stresses how great those gods are, and so how terrible the demons.