கம்பராமாயணம் 936 · பால 14.50

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பானல் அம் கண்கள் ஆட - கருங்குவளை போன்ற கண்கள் பிறழவும்; பவள வாய் முறுவல் ஆட - பவளம் போன்ற (தம்) வாயிலே புன் சிரிப்புத் தோன்றவும்; பீன வெம்முலையின் - பருத்துள்ளனவும் விரும்பத் தக்கனவுமான தனங்களிலே; இட்ட பெருவிலை - அணிந்த மிகுதியான விலை பெற்ற; ஆரம் ஆட - முத்தாரங்கள் அசையும்; தேன் அளகத்து - தேன் வண்டுகள் கூந்தலிலே; முரன்று ஆட - ஒலித்துக் கொண்டு சுழலவும்; திரு மணிக் குழைகள் ஆட - அழகிய மணிகள் இழைத்த குழைகள் (செவிகளில்) அசையவும்; வானவர் மகளிர் - தேவ மாதர்கள்; ஆடும் வாசம் நாறு - ஏறி ஆடுகின்ற மணம் கமழும்; ஊசல் கண்டார் - ஊஞ்சல்களைப் பார்த்தார்கள்.

தெய்வப் பெண்கள் தம் கண் முதலியன ஆட ஊஞ்சல் ஆடுவதையும் சென்றவர் கண்டவர் என்றார். ஊசலாடும் இயல்பை வருணித்தது - தன்மை நவிற்சியணி. ஆட என்ற சொல் ஒரு பொருளில் பலமுறை வந்தது - சொற்பொருள் பின்வருநிலையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Their lovely blue-lily eyes swinging, smiles playing on their coral lips,
  2. the costly pearl strings laid on their full, warm breasts swinging,
  3. bees humming and swinging in their hair, their bright jewelled earrings swinging,
  4. they saw the fragrant swings on which the daughters of the gods were swinging.

What the poem says

The visitors watch the celestial women on their swings. Everything about them sways together: their darting eyes, their smiles, the pearl necklaces on their breasts, the bees circling their hair, and their jewelled earrings.

The Tamil repeats one verb, āṭa, "to swing, sway, play", for every item. Using the same word again and again in the same sense is a recognised figure, and here it mimics the rhythm of the swing. The verse is a plain, lifelike description.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pāṉal am kaṇkaḷ āṭa, pavaḷa vāy muṟuval āṭa,
pīṉa vem mulaiyiṉ iṭṭa peru vilai āram āṭa,
tēṉ muraṉṟu aḷakattu āṭa, tiru maṇik kuḻaikaḷ āṭa,
vāṉavar makaḷir āṭum vācam nāṟu ūcal kaṇṭār.