கம்பராமாயணம் 937 · பால 14.51

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அல்குல் விற்கும் - (தம்) அல்குலை விலைக்கு விற்கின்ற; பைந்தொடி மகளிர் - பசும் பொன்னாலாகிய தொடிகள் அணிந்த விலை மகளிர்; ஓர் பசை இல்லை - (செல்வமெல்லாம் பறித்த பின்) கையிலே சிறிதும் பயனில்லை; என்ன - என்று கருதி, கைத்துவிட்ட - வெறுத்துக் கைவிடப்பட்ட; மைந்தரின் - ஆண்களைப் போல; சுந்தர வான மாதர் - அழகிய தெய்வப் பெண்களின்; துவர் இதழ் - சிவந்த இதழோடு; பவள வாயும் - கூடிய பவளம் போன்ற வாயும்; அந்தம் இல் சுரும்பும் - வரம்பு இல்லாத சுரும்பும்; தேன் மிஞிறும் - தேனும் மிஞிறும் ஆகிய வண்டினங்களும்; உண்டு நீத்த - பருகிக் கைவிட்ட; தீந்தேன் வள்ளங்கள் பலவும் - இனிய மதுக் கிண்ணங்கள் பலவற்றையும்; கண்டார் - பார்த்தார்கள்.

தெய்வப் பெண்களின் வாயும், சுரும்பும், தேனும், மிஞிறும் குடித்து நீத்த வெற்று வள்ளங்களை அங்குள்ளவர் பார்த்தார்கள். வீசி எறியப்பட்ட மதுக்கிண்ணங்களுக்குக் கையில் பொருள் உள்ளவரையிலும் தம்மிடம் வைத்துக் கொண்டு அவர்களிடம் பொருளில்லாதபோது விலைமகளிரால் கைவிடப்படும் மைந்தரை உவமை கூறினார் - உவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Drained by the coral mouths with red lips of the lovely women of heaven
  2. and by countless bees of every kind, and then, like men cast off by the women
  3. with bright bangles who sell their bodies, saying 'there is nothing left in his hand',
  4. they saw many cups of sweet honey-wine thrown away.

What the poem says

The visitors find empty wine cups lying about. They were drained by the celestial women and then by swarms of bees of every kind, and finally tossed aside.

The poet compares them to men ruined by courtesans. Such women keep a lover close while he has money, and throw him out once he has nothing left.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1cuntara vāṉa mātar tuvar itaḻp pavaḷa vāyum,
antamil curumpum, tēṉum, miñiṟum, uṇṭu, alkul viṟkum
pain toṭi makaḷir kaittu ōr pacai illai eṉṉa viṭṭa
maintariṉ nītta, tīm tēṉ vaḷḷaṅkaḷ palavum kaṇṭār.