கம்பராமாயணம் 938 · பால 14.52
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அல் பகல் ஆக்கும் சோதி - இருளையும் பகலாக்கவல்ல ஒளியுடைய; பளிங்கு அறை - பளிங்குப் பாறையால் அமைந்த; அமளிப் பாங்கர் - படுக்கையறையில்; மல் பக மலர்ந்த - மல்லரும் தோற்றோடும்படி விரிந்த; திண்தோள் வானவர் - வலிய தோள்களையுடைய தேவர்களால்; மணந்த கோலம் - கூடப்பெற்ற அழகிய; வில் பகை நுதலினார் - (புருவங்களால்) வில்லோடு பகைக்கும் நெற்றியை உடைய தெய்வப் பெண்கள்; தம் கலவியின் - தமது புணர்ச்சிக் காலத்தில் (இடையூறு தந்தமையால்); வெறுத்து நீத்த - வெறுப்போடு கழற்றியெறிந்த; கற்பகம் ஈன்ற மாலை - கற்பக மலர்களால் கட்டப் பெற்ற மாலைகள்; கலனொடும் கிடப்ப - அணிகலன்களோடு வீழ்ந்து கிடப்பதை; கண்டார் - பார்த்தார்கள்.
பளிங்குப் பாறையிலே தேவர்களால் கூடப் பெற்ற தெய்வ மகளிர் அந்த வானவரைத் தழுவுவதற்கு இடையூறாக இருக்கின்றன என்று கருதித் தாம் அணிந்திருந்த கற்பக மாலைகளையும், கலன்களையும் வெறுத்து எடுத்தெறிந்தனர் என்பது. வில்பகை நுதலினார்: வில்லோடு உவமையில் வேறுபடும் நெற்றியர்
ஆங்கிலம் · English translationAI
Translation
- Beside couches in crystal chambers whose radiance turns night into day,
- the lovely women whose brows are rivals of the bow, embraced by gods
- with mighty shoulders broad enough to rout wrestlers, had flung off in their lovemaking
- garlands born of the wishing-tree; they saw them lying there with their jewels.
What the poem says
In crystal grottoes that glow so brightly they turn night into day, the visitors find heavenly garlands and jewels lying scattered beside the couches.
Celestial women, whose arched brows outdo any bow, threw them off while making love with their divine husbands because they got in the way of the embrace.