கம்பராமாயணம் 9366 · யுத்த 30.15
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இப் பெரும் படை எழுந்து இரைத்து ஏக - அரக்கரின் இந்தப் பெரிய படை போர்க்களம் நோக்கிப் புறப்பட்டு ஆரவாரம் செய்து போகும்போது; ஓங்கு நீர் வீங்கு அலை உவரி - பெருகிவரும் நீர் கொண்டதும் பொங்கும் அலைகள் கொண்டதுமான கடல்; மேல் எழுந்த துப்பு உதிர்ந்தன தூளியின் படலம் மீத் தூர்ப்ப - மேல் எழுந்து பரவியதும் பவளம் தூளாகி உதிர்ந்தது போன்றதுமான தூசிப் படலம் (கடற்பரப்பின் மேற்பரப்பின் மீது வீழ்ந்து தூர்த்தமையால், தப்பு இல் கார் நிறம் தவிர்ந்தது - இயல்பான கரிய நிறத்தை இழந்தது; கரி மதம் தழுவ - சேனையில் உள்ள யானைகளின் மத நீர் கலந்ததால்; உப்பு நீங்கியது - உவர்ப்புச் சுவை நீங்கியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As this great army rose and marched off roaring, the layer of dust
- that rose above, like crumbled coral, settled thick upon it,
- and the sea lost its flawless dark colour; mingled with the elephants' must,
- the swelling, wave-tossed, deep-watered sea lost its salt.
What the poem says
The demon army sets out for the battlefield. The red dust kicked up by its march, like powdered coral, falls on the ocean so thickly that the sea loses its natural dark colour.
The must (mata) streaming from the war elephants pours into the sea in such quantity that it is no longer salty. Both images are hyperboles for the size of the host.