கம்பராமாயணம் 9369 · யுத்த 30.18

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1ஆழி மால் வரை வேலி சுற்றிட வகுத்து அமைத்த
ஏழு வேலையும், இடு வலை; அரக்கரே, இன மா
வாழி காலனும் விதியும் வெவ் வினையுமே, மள்ளர்;
தோழம், மாமதில் இலங்கை; மால் வேட்டம் மேல் தொடர்ந்தான்.

பொருள் · Meaning in Tamil

ஆழி மால் வரை வேலி சுற்றிட - சக்கரவாளமாகிய பெரிய மலையே வேலியாகச் சுற்றி நிற்கும்படி; வகுத்து அமைத்த - நடுவில் வகுத்து அமைக்கப்பட்ட, ஏழு வேலையும் - ஏழு கடல்கள் கொண்ட இடம்; இடு வலை - இடப்பட்ட வலை வீசுதலுக்கு உரிய இடம்; அரக்கரே மா இனம் - அரக்கர்களே விலங்குகளின் கூட்டம்; காலனும் விதியும் வெவ்வினையுமே மள்ளர் - யமனும் பிரமனும் கொடிய ஊழ்வினையுமே (வேட்டையாடும்) வீரர்கள்; மாமதில் இலங்கை தோழம் - பெரிய மதில்களைக் கொண்ட இலங்கையே கொட்டில்; மால் வேட்டம் மேல் தொடர்ந்தார் - அந்த இலங்கையில் மயக்கம் ஊட்டும் (போர்) வேட்டையைத் தொடர்ந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. With the great Cakkaravāḷam range set round as the hedge,
  2. the seven seas laid out within were the net that was cast; the demons were the herd of beasts;
  3. Kālaṉ, Fate and cruel Karma, long may they live, were the hunters;
  4. Ilaṅkai of the great walls was the pen; and they pressed on with the great hunt.

What the poem says

An extended metaphor of a hunt. The ring of the Cakkaravāḷam mountains that encircles the world is the fence; the seven seas are the net; the demons are the game animals.

The hunters who drive them are Death (Kālaṉ), Fate (or Piramaṉ, the ordainer) and the demons' own evil deeds; walled Ilaṅkai is the enclosure into which the animals are herded for slaughter. The army that seems so mighty is in truth being driven to its doom.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āḻi māl varai vēli cuṟṟiṭa vakuttu amaitta
ēḻu vēlaiyum, iṭu valai; arakkarē, iṉa mā
vāḻi kālaṉum vitiyum vev viṉaiyumē, maḷḷar;
tōḻam, mā matil ilaṅkai; māl vēṭṭam mēl toṭarntār.