கம்பராமாயணம் 9371 · யுத்த 30.20

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

நிறை படைப் புணரி - இடமெலாம் பரவி நிறைந்த சேனையாகிய கடல்; வழங்கு பல் படை மீனது - பகைவரை நோக்கிச் செலுத்தப்படுதற்கு உரிய படைக்கலங்களாகிய மீன்களைக் கொண்டது; முழங்குகின்றது மத கரி மகரம் - பிளிறுகின்ற யானைகளாகிய திமிங்கலங்களை உடையது; முரி திரைப் பரியது - கரையில் மோதிச் சிதைகின்ற அலைகளாகிய குதிரைகளைப் பெற்றது; முரசம் தழங்கு பேரொலி கலிப்பது - போர் முரசுகள் ஒலிப்பதால் எழுகின்ற சத்தத்தைக் கொண்டது; தறுகண் மா நிருத - அஞ்சாமை கொண்ட பெரிய அரக்கராகிய; புழுங்கு வெஞ்சினச் சுறவது - மன வேக்காடுடைய கொடிய சினங்கொண்ட சுறாமீன்கள் உடையது.

சேனை, யானை, குதிரை, முரசொலி, அரக்கர் இவை முறையே கடல், திமிங்கலம், அலை, கடலோசை சுறாமீன்கள் ஆகியவையாக உருவகம் செய்யப்பட்டன. முற்றுருவகம் மீன் - அது. 'அது' பகுதிப் பொருளில் விகுதி. அஃதாவது விகுதிக்கெனத் தனிப்பொருள் இல்லை. இப்படியே பரியது, கலிப்பது, சுறவது என்பனவும் பகுதிப் பொருள் விகுதி கொண்டவை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Its fish are the many weapons that are wielded; its makaras are the must elephants
  2. that trumpet; its horses are its breaking waves; its roar
  3. is the great sound of booming drums; its sharks are the fearless, mighty demons,
  4. seething with fierce rage: such was that sea, the full army.

What the poem says

The whole army is pictured as an ocean, in a complete metaphor. The weapons are its fish, the trumpeting elephants its sea monsters (makaram), the horses its breaking waves, the war drums its roar, and the fearless, furious demons its sharks.

The commentary adds a grammatical note: the ending "-atu" on words like "fish-atu" adds no meaning of its own here.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vaḻaṅku pal paṭai mīṉatu; mata kari makaram
muḻaṅkukiṉṟatu; muri tiraip pariyatu; muracam
taḻaṅku pēr oli kalippatu; taṟukaṇ mā nirutap
puḻuṅku veñ ciṉac cuṟavatu niṟaipaṭaip puṇari.