கம்பராமாயணம் 9373 · யுத்த 30.22

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1படியைப் பார்த்தனர்; பரவையைப் பார்த்தனர்; படர்வான்
முடியைப் பார்த்தனர்; பார்த்தனர்; நெடுந் திசை முழுதும்;
விடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர்; மிடைந்த
பொடியைப் பார்த்தனர்; வேர்த்தனர், வானவர் குலைந்தார்.

பொருள் · Meaning in Tamil

வானவர் - தேவர்கள்; படியைப் பார்த்தனர் - நிலவுலகத்தைப் பார்த்தார்கள்; பரவையைப் பார்த்தனர் - கடலிடத்தைப் பார்த்தார்கள்; படர் வான் முடியைப் பார்த்தனர் - எங்கெங்கும் பரவியுள்ள ஆகாயத்தின் உச்சியைப் பார்த்தார்கள்; நெடும் திசை முழுதும் பார்த்தனர் - நீண்ட திசைகள் முழுவதையும் பார்த்தார்கள்; வெடியப் பார்ப்பது ஓர் வெள்ளிடை கண்டிலர் - (அரக்கர் சேனை இல்லா இடம்) ஒழிந்ததால் பார்ப்பதற்கு ஒரே ஒரு வெற்றிடத்தைக்கூட அவர்கள் காணவில்லை; மிடைந்த கொடியைப் பார்த்தனர் - நெருங்கிச் செறிந்த கொடிகளைப் பார்த்தார்கள்; வேர்த்தனர் குலைந்தார் - அச்சத்தால் உடல் வேர்த்தவராய் மனம் குலைந்தார்கள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. They looked at the earth; they looked at the sea; they looked at the summit
  2. of the spreading sky; they looked over all the long directions;
  3. they found not one empty space their gaze could break through to; they saw only the crowded
  4. banners; they broke into sweat; the gods were shaken.

What the poem says

The gods look on from heaven. Wherever they turn, earth, sea, the height of the sky, every direction, they cannot find a single open space free of the demon army; all they can see is a dense mass of banners. They sweat with fear and lose heart.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1paṭiyaip pārttaṉar; paravaiyaip pārttaṉar; paṭar vāṉ
muṭiyaip pārttaṉar; pārttaṉar; neṭun ticai muḻutum;
veṭiyap pārppatu ōr veḷḷiṭai kaṇṭilar; miṭainta
koṭiyaip pārttaṉar; vērttaṉar, vāṉavar kulaintār.