கம்பராமாயணம் 9374 · யுத்த 30.23

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
'
பாட வேறுபாடு · Project Madurai reads
1'உலகில் நாம் அலா உரு எலாம் இராக்கத உருவா,
அலகு இல் பல்படை பிடித்து அமர்க்கு எழுந்தவோ? அன்றேல்
விலகு இல் நீர் திரை வேலை ஓர் ஏழும் போய் விதியால்
புலைகொள் வல் உரு பொடித்தனவோ? ' எனப் புகன்றார்.

பொருள் · Meaning in Tamil

உலகில் நாம் அலா உரு எலாம் - உலகத்தில் நம்மைத் தவிர உள்ள எல்லா உருவங்களும்; இராக்கத உருவா - அரக்கர் உருவாகி; அலகு இல்பல் படை பிடித்து - அளவில்லாத பல வகைப் போர்க்கருவிகளை ஏந்தி; அமர்க்கு எழுந்தவோ - போர் செய்வதற்குப் புறப்பட்டு வந்தனவோ? அன்றேல் - அவ்வாறு இல்லையென்றால்; விலகு நீர்த்திரை - விலகிச் செல்லுகின்ற நீர் அலைகளையுடைய; வேலை ஓர் ஏழும் போய் - ஏழு கடல்களும் சென்று; விதியால் - முறைப்படி; அலகுஇல் பல் உருப் படைத்தனவோ - அளவில்லாத பல வடிவங்களை உண்டாக்கினவோ? என அயிர்த்தார் - என்று ஐயப்பட்டனர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Have all the forms in the world except ourselves taken demon shape
  2. and, gripping countless weapons, risen up for war? Or else
  3. have the seven seas with their rolling waves gone forth and, by some ordinance,
  4. taken on countless forms?" So they wondered.

What the poem says

The gods, bewildered by the size of the host, guess at where it could have come from. Perhaps every creature in the world apart from the gods themselves has turned into a demon and taken up arms. Or perhaps the seven oceans have left their beds and taken on innumerable bodies.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ulakil nām alā uru elām irākkata uruvā,
alaku il pal paṭai piṭittu amarkku eḻuntavō? aṉṟēl
vilaku nīrt tirai vēlai ōr ēḻum pōy vitiyāl
alaku il pal urup paṭaittaṉavō? ' eṉa ayirttār.