கம்பராமாயணம் 9376 · யுத்த 30.25
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஒருவரைக் கொல்ல - இந்த அரக்கருள் ஒருவனைக் கொல்ல வேண்டுமென்றாலும்; ஆயிரம் இராமர் ஒருங்கே வந்து - ஆயிரம் இராமர்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்து; இரு பதிற்றிரண்டு ஆண்டு - இருபத்து நான்கு ஆண்டுக்காலம்; நின்று அமர் செய்தால் என் ஆம் - புறமுதுகு இட்டு ஓடாமல் உறுதியாக நிலைத்து நின்று போர் செய்தாலும் என்ன விளைவு ஆகப்போகிறது? (ஒன்றும் செய்துவிட முடியாது); நிருதரைக் கொல்வது - அரக்கர்களைக் கொல்வதென்பது; இடம் பெற்று ஓர் இடையில் நின்று அன்றோ - நிற்பதற்குப் போர்க்களத்தில் இடம் பெற்று, அந்த ஓரிடத்தில் உறுதியாக நின்றபிறகு அன்றோ? (நிற்பதற்கு இடம் கிடைக்கவும் போவதில்லை; ஓர் இடத்தில் நின்று போர் செய்ய முடியப்போவதும் இல்லை என்பதாம்.) பொருவது - போர் செய்வதென்பது; இப்படை கண்டு - இந்தப் படையைக் கண்ட பிறகும், தம் உயிர் பொறுத்து அன்றோ? - தங்கள் உயிரைத் தாங்கி நிற்கும் சாகசம் பெற்றால் அன்றோ? பதிற்றிரண்டு - பன்னிரண்டு. இரு பதிற்றிரண்டு - இரண்டு பன்னிரண்டுகள்; இருபத்து நான்கு. இருபதிற்றிரண்டு எனப்பிரியாது இருபதிற்றி இரண்டு - எனப்பிரித்து நாற்பதாண்டுகள் என்பார் உளர். பன்னிரண்டு என்பது ஒரு வியாழ வட்டம். எனவே ஒரு வியாழ வட்டங்கள் இருபத்து நான்கு என்றாராம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "To kill just one of them, if a thousand Irāmaṉs came together
- and stood and fought for twice twelve years, what would come of it?
- Killing the demons means first finding room and standing firm in one place, does it not?
- Fighting means keeping hold of one's life after seeing this army, does it not?"
What the poem says
The gods continue their lament to Civaṉ. Even a thousand Irāmaṉs fighting together for twenty-four years ("twice twelve") could not kill a single one of these demons.
To kill demons you must first find space to stand on the battlefield and hold your ground, and there is no such space. To fight at all you must still be alive after merely seeing this host. Some read the number as forty years, and twelve years is also one cycle of Jupiter.