கம்பராமாயணம் 9379 · யுத்த 30.28

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

சில சில அணையின் மேல் சென்ற - மூல பலச் சேனையைக் கண்டு ஓடிய வானரங்களில் சிலசில தாம் கட்டிய அணைமேல் தப்பி ஓடின; சில ஆழியை நீந்தப் புணைகள் தேடின - வேறு சில வானரங்கள் கடலை நீந்திக் கடப்பதற்குத் தெப்பம் தேடின; சில நீந்தின போன - மேலும் சில வானரங்கள் கடலில் நீந்திச் சென்றன; சில துணைகளோடு புக்கு அழுந்தின - மற்றும் சில வானரங்கள் துணைவந்த வானரங்களோடு கடலில் மூழ்கின; சில தோன்றாப் பணைகள் ஏறின - இன்னும் சில வானரங்கள் பார்ப்போர்க்குத் தெரியாத மரக்கிளைகளில் ஏறிக்கொண்டன; பல, மலை முழை புக்கன - பல வானரங்கள் மலைக்குகைகளுக்குள் புகுந்தன.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Some few ran off along the causeway; some looked for rafts
  2. to swim the sea; some swam and were gone;
  3. some plunged in with their companions and sank; some climbed
  4. into branches where they could not be seen; many crept into mountain caves.

What the poem says

A catalogue of the monkeys' flight. Some run back across the causeway they themselves built to Ilaṅkai; some hunt for rafts; some swim off; some go into the sea with their comrades and drown; some hide high in the trees; many take refuge in mountain caves.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1aṇaiyiṉmēl ceṉṟa, cila cila; āḻiyai nīntap
puṇaikaḷ tēṭiṉa, cila; cila nīntiṉa pōṉa;
tuṇaikaḷōṭu pukku, aḻuntiṉa cila; cila tōṉṟāp
paṇaikaḷ ēṟiṉa; malai muḻai pukkaṉa, palavāl.