கம்பராமாயணம் 9380 · யுத்த 30.29
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
அடைத்த பேர் அணை நமக்கு உயிர் அளித்தது - கடலைத் தூர்ப்பதற்காக நாம் அமைத்த பெரிய அணை இப்போது நமக்கு உயிர் அளித்தது; அவர் தொடராமல் அடைய உடைத்துப் போதும் - நம்மைப் பிடிப்பதற்கு அந்த அரக்கர் தொடர்ந்து வர முடியாமல் அணை முழுவதையும் உடைத்துக் கொண்டே போவோம். விசும்பினும் புடைத்துச் செல்குவர் என்றன - தப்பி ஓடுகின்ற நம்மை ஆகாய வழியிலும் வந்து அடித்துப் போடுவார்கள்; போதோன் படைத்த திக்கு எலாம் பரந்தனர் - தாமரை மலரில் உள்ள நான்முகன் படைத்த எல்லாத் திசைகளிலும் அவ் அரக்கர்கள் பரவியுள்ளனர்; என்றன பயத்தால் - பயங்கொண்டமையால் இவ்வாறு (வானரங்கள்) கூறின.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "The great causeway we built has given us our lives; let us go
- and break it all up behind us so they cannot follow," some said;
- "They will come through the sky as well and strike us down," said others; "they have spread
- through every direction that the Lotus-born made," they said, in their fear.
What the poem says
The fleeing monkeys talk among themselves in panic. Some say the bridge they built has saved their lives, and they should smash it as they cross so the demons cannot pursue.
Others answer that the demons will simply chase them through the sky, for they fill every quarter of the world created by Piramaṉ, the god seated on the lotus.