கம்பராமாயணம் 9381 · யுத்த 30.30

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1அரியின் வேந்தனும், அனுமனும், அங்கதன் அவனும்,
பிரியகிற்றிலர் இறைவனை, நின்றனர் பின்றார்;
இரியல் உற்றனர் மற்றையோர் யாவரும், எறிநீர்
விரியும் வேலையைக் கடந்தனர்; நோக்கினன், வீரன்.

பொருள் · Meaning in Tamil

அரியின் வேந்தனும் அனுமனும் அங்கதன் அவனும் - குரங்குகளின் அரசனாகிய சுக்கிரீவன், அனுமன், அங்கதன், ஆகியோர்; இறைவனைப் பிரியகிற்றிலர் - தலைவனாகிய இராமனைப் பிரிய முடியாதவர்களாய், பின்றார் நின்றனர் - பின்னிட்டு ஓடாமல் நின்றனர்; மற்றையோர் யாவரும் இரியலுற்றனர் - வானரர் படையில் இருந்த மற்றவர் எல்லோரும் ஓடலாயினர்; எறிநீர் விரியும் வேலையும் கடந்தனர் - அலை வீசும் நீர் பரந்த கடலையும் தாண்டிச்சென்றனர்; வீரன் நோக்கினன் - இந்த நிலையை வீரனாகிய இராமன் பார்த்தான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The king of the monkeys, Aṉumaṉ, and Aṅkataṉ too
  2. could not bring themselves to leave their lord; they stood and did not fall back;
  3. all the others took to flight and crossed even the wide sea
  4. with its tossing waters; the hero saw it.

What the poem says

Only three stand firm beside Irāmaṉ: Cukkirīvaṉ the monkey king, Aṉumaṉ and Aṅkataṉ, who cannot bear to be parted from their lord. All the rest of the monkey army flees, crossing back over the sea. Irāmaṉ, the hero, sees what has happened.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ariyiṉ vēntaṉum, aṉumaṉum, aṅkataṉ avaṉum,
piriyakiṟṟilar iṟaivaṉai, niṉṟaṉar piṉṟār;
iriyaluṟṟaṉar maṟṟaiyōr yāvarum, eṟi nīr
viriyum vēlaiyum kaṭantaṉar; nōkkiṉaṉ, vīraṉ.