கம்பராமாயணம் 9385 · யுத்த 30.34
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கேட்ட அண்ணலும் - மேற்கண்டவாறு வீடணன் கூறியதைக் கேட்ட இராமபிரான்; முறுவலும் சீற்றமும் கிளர - புன்சிரிப்பும் கோபமும் பொங்கிவர; காட்டுகின்றனென் - என் (வீரச்செயல்) இப்படிப்பட்டது என்பதைக் காட்டுகின்றேன்; ஓர் கணத்தில் காணுதி - (என் சீற்றத்தின் விளைவால் இச்சேனை முழுவதும் அழிவதை) ஒரு கண நேரத்தில் காண்பாயாக; என்னா - என்று (வீடணனிடம்) சொல்லிவிட்டு; உரவோய் - வலிமை மிக்க வீரனே! ஓட்டின் மேற்கொண்ட தானையை - ஓட்டம் பிடித்த சேனை வீரர்களை; பயம் துடைத்து - அவர்கள் கொண்ட அச்சத்தைப் போக்கி, மீட்டி - திரும்பக் கொண்டு வருவாயாக; என - என்று இராமபிரான் சொல்ல; அங்கதன் ஓடினன் விரைந்தான் - அங்கதன் விரைந்து ஓடினான்.
முறுவல் வெளியே புலப்படத் தோன்றிய மெய்ப்பாடு. கொல் அசைநிலை. விரைந்து (விரைந்தான்) ஓடினன் என்று இருக்கவேண்டிய தொடர் ஓடினான் விரைந்தான் என மாறிநின்றது. ஓட்டத்தின் வேகத்தைப் புலப்படுத்த முனைந்த கவியின் சொல் ஓட்டம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The noble one, hearing this, with a smile and with anger rising together,
- said, "I will show you; watch, in a single moment";
- "Strong one! wipe away the fear of the army that has taken to flight
- and bring it back," he said; and Aṅkataṉ ran, he sped.
What the poem says
Irāmaṉ hears Vīṭaṇaṉ out with a smile and rising anger together. He promises to show him, in an instant, what his own valour can do to this army.
Then he tells Aṅkataṉ to go after the fleeing monkeys, calm their fear and bring them back. The last words, "he ran, he sped", reverse the expected order ("he ran swiftly"); the commentary sees in this the poet making the words themselves rush, to convey Aṅkataṉ's speed.