கம்பராமாயணம் 9386 · யுத்த 30.35
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
சென்று சேனையை உற்றனன் - (இராமபிரான் ஏவிய வண்ணம்) அங்கதன் ஓடிக்கொண்டிருந்த வானர சேனையை அடைந்தான்; சிறை சிறை கெடுவீர் - கண்ட கண்ட பக்கமெல்லாம் சிதறி ஓடுகின்றவர்களே! நின்று கேட்டபின் நீங்குமின் - (நான் சொல்லப்போவதை) நின்று கேட்டபிறகு ஓட வேண்டுமென்று நினைத்தால் பிறகு செல்லுங்கள்! எனச் சொல்லி நேர்வான் - எனச் சொல்லி அவர்களை நெருங்கினான்; அக்குரக்கு இனம் - அங்கதன் கூறியதைக் கேட்ட அந்தக் குரங்குக் கூட்டம்; ஒன்றும் கேட்கிலம் என்றது - நீ சொல்வது எதையும் கேட்க மாட்டோம் என்று சொல்லியது; உரையால் - அங்கதன் சொன்ன சொல்லால், வென்றி வெந்திறல் - வெற்றியை விளைக்கின்ற கொடிய ஆற்றல் கொண்ட; படைப் பெருந் தலைவர்கள் மீண்டார் - சேனையை நடத்துகின்ற பெரிய சேனைத்தலைவர்கள் (மட்டும்) திரும்பி வந்தார்கள்.
தலைவர்கள் முதலில் ஓடினாலும் அங்கதன் சொன்னதைக் கேட்டபின் சற்றே பொறுப்புணர்வு தோன்ற, திரும்பி வந்தனர். இது தலைமைக்குரிய பாங்கு; பொறுப்புணர்வு இல்லாதது தலைமையாகாதே.
ஆங்கிலம் · English translationAI
Translation
- He went and reached the army: "You who scatter in every direction and are lost!
- Stop and hear me, and then leave," he said, as he came up to them;
- "We will hear nothing," said that host of monkeys; but at his words
- the great captains of the army, fierce and victorious, turned back.
What the poem says
Aṅkataṉ catches up with the fleeing monkeys and calls on them to stop and listen before they run any further. The rank and file refuse to hear a word.
But the great commanders, who had also fled, feel their responsibility at his words and turn back. The commentary remarks that this sense of responsibility is the mark of true leadership.