கம்பராமாயணம் 9387 · யுத்த 30.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீண்டு - அங்கதன் சொல்லால் திரும்பி; வேலையின் வடகரை ஆண்டு ஒரு வெற்பின் - கடலின் வடக்குக் கரையிலே இருந்த ஒரு மலையிடத்தில்; ஈண்டினார்களை - நெருங்கி வந்த படைத்தலைவர்களை நோக்கி, என் குறித்து இரிவுற்றது என்றான் - எதனை நினைத்து இப்படி ஓடினீர்கள் என்று அங்கதன் கேட்டான்; மறுப்பார் - அங்கதனின் கருத்தை மறுப்பவர்களாய்; ஆண்ட நாயக - எங்களை ஆளாகக் கொண்ட தலைவனே; நீ அவரைக் கண்டிலை போலும் - நீ அந்த அரக்கர்களை (சரியாகப்) பார்க்கவில்லை போல் தெரிகிறது (பார்த்திருந்தால் நீயும் எம்மோடு ஓடி வந்திருப்பாய்); மாண்டு செய்வது என் - வீணாக உயிர் விடுதல் சாதிக்கக்கூடியது என்ன?; என்று உரை கூறினர் - என விடை சொன்னார்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- To those who had turned back and gathered there on a hill on the sea's north shore
- he said, "With what thought did you flee?"
- "Lord who rules us! It seems you have not seen them!
- What is gained by dying?" they said in reply, objecting.
What the poem says
The captains have turned back and gather on a hill on the northern shore of the sea. Aṅkataṉ asks them why they ran. They answer in protest: he cannot have seen the demons properly, or he would have run too. What would be achieved by throwing their lives away?