கம்பராமாயணம் 9390 · யுத்த 30.39

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஊழி ஆயிரம் கோடி நின்று, உருத்திரனோடும்
ஆழியானும் மற்று அயனொடு புரந்தரன் அவனும்,
சூழ ஓடினர்; ஒருவரைக் கொன்று தம் தோளால்
வீழுமா செய்ய வல்லரேல், வென்றியின் நன்றே!

பொருள் · Meaning in Tamil

உருத்திரனோடும் - அழித்தற் கடவுளாகிய உருத்திர மூர்த்தியோடு; ஆழியானும் - சக்கராயுதம் ஏந்திய திருமாலும்; அயனொடு புரந்தரன் அவனும் - பிரமனோடு இந்திரனும்; ஆயிர கோடி ஊழி நின்று - ஆயிரங்கோடி ஊழிக் காலமாக; சூழ ஓடினர் - இவ்வரக்கர்களைச் சுற்றிச் சுற்றி ஓடினவர்களாய்; ஒருவரைக் கொன்று - இந்த அரக்கர்களிடையே ஒரே ஒருவரை மட்டிலுமாவது கொன்று; தம் தோளால் வீழுமா செய்ய வல்லரேல் - தங்களுடைய தோள்வலிமை கொண்டு செத்து விழுமாறு செய்யும் வல்லமை உடையவராயின்; வென்றியின் நன்றே - பிற வெற்றிகளையெல்லாம் விடப் பெரியதாகும்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "If, for a thousand crores of ages, Uruttiraṉ
  2. and the Lord of the discus, and Ayaṉ, and Purantaraṉ too,
  3. ran circling round them, and could kill just one of them
  4. and fell him by the strength of their own arms, that would be better than any victory!"

What the poem says

Still the captains. Even if Uruttiraṉ (Civaṉ), Viṣṇu the discus-bearer, Ayaṉ (Piramaṉ) and Purantaraṉ (Intiraṉ) were to chase around these demons for countless ages, merely to kill a single one of them by the strength of their own arms would be a greater feat than any victory they have ever won.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'ūḻi āyira kōṭi niṉṟu, uruttiraṉōṭum
āḻiyāṉum maṟṟu ayaṉoṭu purantaraṉ avaṉum,
cūḻa ōṭiṉar; oruvaraik koṉṟu tam tōḷāl
vīḻumā ceyya vallarēl, veṉṟiyiṉ naṉṟē!