கம்பராமாயணம் 9391 · யுத்த 30.40
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என் அப்பா - என் தந்தை போன்றவனே! இவ் எழுபது வெள்ளமும் - இந்த எழுபது வெள்ளம் வானரசேனை முழுவதும்; ஒருவன் தின்னப் போதுமோ - அரக்கரில் ஒருவனுக்கேனும் தின்பதற்குப் போதுமா? சிறியேம் - வடிவாலும் வலிமையாலும் சிறியவர்களாகிய நாங்கள்; தேவரின் வலியமோ? - பல்வகைப் பேராற்றல் கொண்ட தேவர்களைவிட வலிமை உடையவர்களா? (இல்லை) முன் இப் பார் எலாம் படைத்தவன் - முன்னே இந்த உலகமெல்லாம் படைத்த பிரமன்; நாள் எலாம் - தன் வாழ் நாளெல்லாம்; முறை நின்று உன்னிப் பார்த்து நின்று - முறையாகக் கவனமாகப் பார்த்து நின்று கணக்கிட்டாலும்; யூகம் - நம் வானரசேனை; உறையிடப் போதுமோ - உறையிடுவதற் காவது போதுமானதாகுமோ? (ஆகாது).
பிரமன் தன் வாழ்நாள் முழுவதும் அரக்கர் சேனையைக் கணக்கிட்டு உணரும் முயற்சியில் வானர சேனை வீரர்களை யாவரையும் உறையிட்டுப் பார்த்தாலும் முடிவு காணமுடியாது. மிகப் பெரிய அளவாக உள்ளவற்றைக் கணக்கிடும்போது நூற்றுக்கு ஒன்றாக அடையாளம் கொண்டு கணக்கிடுவது உறையிடுதல் க்க வியூகம் என்ற வடமொழிச் சொல் யூகம் எனத் திரிந்து நின்றது. யூகம் - குரங்கு. "உறை இடப்போதுமோ யூகம்" என இயையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "My dear father! would all these seventy veḷḷams be enough
- for one of them to eat? Are we, small as we are, stronger than the gods?
- If he who first made all this world stood all his days in due order
- watching and reckoning, would our monkey host suffice even as tally-marks?"
What the poem says
The captains end their reply. The whole monkey army of seventy veḷḷams (a vast unit of number) would not make a meal for a single demon, and the monkeys are hardly stronger than the gods.
The last image: when counting something enormous, one sets aside a token for every hundred. If Piramaṉ spent his whole life counting the demon host, all the monkeys together would not be enough to serve as his tally-tokens. The commentary notes that "yūkam" here may be read either as a host or as monkeys.