கம்பராமாயணம் 9392 · யுத்த 30.41
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
நாயகன் - இந்த அரக்கர்களின் தலைவனுக்கு, தலை பத்து உள - பத்துத் தலைகள் இருக்கின்றன; கையும் நால் ஐந்து - கைகள் இருபது; என்று ஓயும் உள்ளத்தேம் - என்று நினைக்கும் போதே தளர்ந்து போகும் உள்ளம் உடையவர்களாய் இருக்கிறோம்; மற்று அவன் ஒருவன் - பத்துத் தலையும் இருபது கைகளும் உடைய அவன் ஒருவன்தான்; இங்கு வந்து உற்றார் - (தலைவனாகிய இராவணன் அப்படி இருக்க) இங்கே போருக்கு வந்துள்ள அரக்கர் ஒவ்வொருவருக்கும்; ஆயிரம் தலை - ஆயிரம் தலைகள்; அதற்கு இரட்டிக் கையர் - அதற்கு இரண்டு மடங்கு கைகள் (இரண்டாயிரம் கைகள்); ஐயா - ஐயனே!; பாயும் வேலையின் - அலை மோதுகின்ற கடலின்; கூலத்து - கரையிலே உள்ள; மணலினும் பலர் - மணலை விட அதிகமானவர்கள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "'Their chief has ten heads, and arms four times five,' so we think,
- and our hearts sink; yet he is only one; those who have come here
- have a thousand heads, and twice as many arms; sir!
- they are more than the sand on the shore of the surging sea."
What the poem says
The monkeys' fear continues. Merely thinking of Irāvaṇaṉ's ten heads and twenty arms is enough to make their hearts fail, and he is only one. Each demon who has now arrived has a thousand heads and two thousand arms, and they outnumber the grains of sand on the seashore.