கம்பராமாயணம் 9394 · யுத்த 30.43

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அனுமன் ஆற்றலும், அரசனது ஆற்றலும், இருவர்
தனுவின் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலா;
கனியும் காய்களும் உணவு உள; முழை உள, கரக்க;
மனிதர் ஆளின் என், இராக்கதன் ஆளின் என், வையம்?

பொருள் · Meaning in Tamil

அனுமன் ஆற்றலும் அரசனது ஆற்றலும் - அனுமன் வலிமையும் நம் மன்னனாகிய சுக்கிரீவனது வலிமையும்; இருவர் தனுவின் ஆற்றலும் - இராமன், இலக்குவன், ஆகிய இரண்டு பேரின் வில் ஆற்றலும், தம் உயிர் தாங்கவும் சாலா - தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கே போதா (இப்படிப்பட்ட நிலையில் நாமெல்லாம் பிழைத்திருக்க முடியுமா?) கனியும் காய்களும் உணவு உள - உண்பதற்குப் பழங்களும் காய்களும் இருக்கின்றன; கரக்க முழை உள - மறைந்து கொள்ள குகைகள் இருக்கின்றன; வையம் - இந்த உலகத்தை, மனிதர் ஆளின் என் இராக்கதர் ஆளின் என் - மனிதர்கள் ஆண்டால் என்ன, அரக்கர்கள் ஆண்டால் என்ன (அதைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?)

இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற பழமொழி பிறந்த சூழலை இப்பாட்டு உணர்த்துகிறது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Aṉumaṉ's might, our king's might, and the might
  2. of the two men's bows will not be enough even to save their own lives;
  3. there are fruits and green fruit to eat; there are caves to hide in;
  4. what does it matter whether men rule the world or demons?"

What the poem says

The captains finish. Aṉumaṉ, Cukkirīvaṉ and the bows of Irāmaṉ and Ilakkuvaṉ together will not even save their owners' lives, so what hope is there for the rest? The monkeys have fruit to eat and caves to hide in; whether men or demons rule the world is no concern of theirs.

The commentary notes that the Tamil proverb "What does it matter whether Irāmaṉ rules or Irāvaṇaṉ?" reflects exactly this attitude.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'aṉumaṉ āṟṟalum, aracaṉatu āṟṟalum, iruvar
taṉuviṉ āṟṟalum, tam uyir tāṅkavum cālā;
kaṉiyum kāykaḷum uṇavu uḷa; muḻai uḷa, karakka;
maṉitar āḷiṉ eṉ, irākkatar āḷiṉ eṉ, vaiyam?