கம்பராமாயணம் 9395 · யுத்த 30.44
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
எம் பெரும ! - எங்கள் தலைவனே! தாம் உளார் அன்றே புகழினைத் திருவொடும் தரிப்பார் - தாம் உயிரோடு இருப்பவர்கள் தாமே புகழைச் செல்வத்தோடு தாங்கியிருப்பார்கள்? யாம் உளோம் எனின் - நாங்கள் உயிரோடு இருந்தால்தான்; எம் கிளை உள்ளது - எங்கள் சுற்றமும் இருப்பதாகும்; புரப்போய் - எங்களைப் பாது காப்பவனே; போமின் நீர் என்று விடைதரத் தக்கனை - இந்தப் போர்க்களத்தை விட்டு நீங்கள் செல்லுங்கள் என்று விடை கொடுத்து எங்களை அனுப்புதற்கு உரியவனாகிய நீ; சாமின் நீர் என்றல் தருமம் அன்று - நீங்கள் யாவரும் (இங்கே அரக்கரால்) சாவீராக என்று கூறுதல் அறமாகாது; என்றனர் தளர்ந்தார் - என்று மனம் தளர்ந்தவர்களாய்க் கூறினர்;
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Is it not only those who live who can wear fame along with fortune?
- If we live, our kin live on; our lord!
- you who protect us, you ought to give us leave, saying 'Go';
- to say 'Die' is not dharma," said they, disheartened.
What the poem says
The dispirited captains make a final plea to Aṅkataṉ. Only the living can enjoy fame and prosperity; if they survive, their families survive too. As their protector, he should send them away with his blessing; ordering them to stay and die would not be right.