கம்பராமாயணம் 9397 · யுத்த 30.46
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
தெரிந்து தேற்றுவாய் - நிலைமையை நன்றாகத் தெரிந்து கொண்டபின் கலக்கமுற்றவர்களைத் தேற்றுவாய்; தெளிவிலோரைச் சொல்லால் தெருட்டுவாய் - அறிவிலே தெளிவில்லாதவர்களை உன் தெளிவான சொல்லால் தெளிவு படுத்துவாய்; ஆற்றுவாய் அல்லை - அப்படிப்பட்ட நீயே இப்போது எதிரிகளின் ஆற்றலைத் தாங்க முடியாதவனாக விட்டாய்; நீயும் அஞ்சினை போலும் - நீ கூடப் பயந்து விட்டாயோ? ஆவி போற்றுவாய் என்றபோது - வீரத்தையும் குறிக்கோளையும் போற்றாமல் உன் உயிரையே பெரிது எனப் போற்றுகிறாய் என்றால்; புகழ் என் ஆம் - புகழ் என்ன ஆகும்? புலமை என் ஆம் - அறிவுதான் என்னாகும்? இறைமை கொண்டார் - தலைமைப் பண்பு கொண்டவர்; கூற்றின் வாய் உற்றால் - யமன் வாயில் அகப்பட்டு விட்டால்; வீரம் குறைவரே - வீரத்தில் குறைவு படுவார்களோ? (வீரத்தில் குறையார் என்பது இயல்பு)
ஆங்கிலம் · English translationAI
Translation
- "You who comfort others, who with well-chosen words bring the confused to clarity,
- now you cannot bear up; it seems you too are afraid! When you
- set yourself to guard your life, what becomes of fame? what of wisdom?
- Do those who hold leadership fall short in valour when they come into Death's jaws?"
What the poem says
Aṅkataṉ goes on. Cāmpaṉ is the one who always consoles the troubled and clears the minds of the confused; yet now he cannot hold firm and seems as frightened as the rest.
If one cares only to save one's life, fame and learning count for nothing. A true leader does not weaken in courage even when he is in the very mouth of Death.