கம்பராமாயணம் 9408 · யுத்த 30.57

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'ஒன்றும் நீ அஞ்சல், ஐய! யாம் எலாம் ஒருங்கு சென்று
நின்றும், ஒன்று இயற்றல் ஆற்றேம்; நேமியான் தானே நேர்ந்து
கொன்று போர் கடக்கும் ஆயின் கொள்ளுதும் வென்றி, அன்றேல்
பொன்றுதும் அவனோடு என்றான் 'போதலோ புகழ் அன்று 'என்றான்.

பொருள் · Meaning in Tamil

ஐய! ஒன்றும் நீர் அஞ்சல் - நீர் சிறிதும் அஞ்சல் வேண்டா; யாம் எலாம் ஒருங்கே சென்று நின்றும் - நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து போய் அரக்கர்களை எதிர்த்து நின்றால் கூட; ஒன்று(ம் இயற்றல் ஆற்றேம் - அரக்கர்களை அழிப்பதில் எதுவும் செய்ய முடியாதவர்கள் நாம்; நேமியான் தானே நேர்ந்து - சக்கரப் படை கொண்ட திருமாலாகிய இராமனே எதிர்த்து நின்று; கொன்று போர் கடக்குமாயின் - அரக்கர்களைக் கொன்று வென்றானானால்; கொள்ளுதும் வென்றி - நாம் வெற்றி பெறுவோம்; அன்றேல் - அப்படி இராமபிரான் வெல்லாவிடின்; அவனோடு பொன்றுதும் - அந்த இராமனோடு நாமும் சாவோம்; என்றான் - எனச் சாம்பவான் சொன்னான்; போதலோ புகழ் அன்று என்றான் - போர்க்களத்தை விட்டுப் போவது புகழாகாது என்றும் அவன் சொன்னான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "Fear nothing at all, sir! Even if we all go together
  2. and stand there, we can do nothing; if the Lord of the discus himself takes the field
  3. and kills and wins the war, we shall share the victory; if not,
  4. we shall die with him," he said; "to go away is no glory," he said.

What the poem says

Cāmpaṉ's conclusion. There is nothing to fear: even all together the monkeys could achieve nothing against these demons, but they need not. Irāmaṉ, who is Viṣṇu the discus-bearer, will fight them himself. If he wins, the victory is theirs too; if he does not, they will die at his side. Running away brings no honour.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'oṉṟum nīr añcal, aiya! yām elām oruṅku ceṉṟu
niṉṟum, oṉṟu iyaṟṟal āṟṟēm; nēmiyāṉ tāṉē nērntu
koṉṟu pōr kaṭakkum āyiṉ koḷḷutum veṉṟi, aṉṟēl
poṉṟutum avaṉōṭu eṉṟāṉ 'pōtalō pukaḻ aṉṟu 'eṉṟāṉ.