கம்பராமாயணம் 9409 · யுத்த 30.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
ஈண்டிய தானை நீங்க நிற்பது என் - நெருங்கிய சேனை நிற்க நாம் விலக நிற்பது ஏன்; யாமே சென்று - நாமே புறப்பட்டு; பூண்ட வெம்பழியினோடும் போந்தனம் - மேற்கொண்ட கொடிய பழியோடு வந்து விட்டோம்; போதும் என்னா - (இனிப் பழிதுடைக்க இராமனிடம்) போவோம் என்று முடிவு செய்து; அங்கதனோடு தலைவர் எல்லாம் மீண்டனர் - அங்கதனோடு சேர்ந்து வானரப் படைத்தலைவர்கள் யாவரும் திரும்பி வந்தனர்; மூண்ட வெம் படையை நோக்கி - எதிர்த்தெழுந்த கொடிய அரக்கர் சேனையைப் பார்த்து; வீரன் - இராமன்; தம்பிக்கு மொழிவதானான் - இலக்குவனுக்குச் சொல்லலானான்.
மூண்ட வெம்படையை நோக்கி திரும்பி வந்து செறிந்த வானரப் படையைப் பார்த்து என உரைப்பினும் அமையும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "Why stand apart while the massed army goes? We ourselves set off
- and came away carrying cruel disgrace; let us go," they said,
- and all the captains turned back with Aṅkataṉ; the hero,
- looking at the fierce army ranged for battle, began to speak to his brother.
What the poem says
The monkey captains resolve to return. They admit that by leaving they brought a heavy disgrace on themselves, and decide to go back to Irāmaṉ to wipe it out. They return together with Aṅkataṉ.
Irāmaṉ, looking at the fierce army massed before him, turns to speak to Ilakkuvaṉ. The army he looks at may be the demon host or the returning monkeys; the commentary allows both.