கம்பராமாயணம் 9410 · யுத்த 30.59

Section யுத்த காண்டம் / 30. மூலபல வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1'அத்த! நீ உணர்தி அன்றே அரக்கர்தான், அவுணரேதான்,
எத்தனை உளர் என்றாலும், யான் சிலை எடுத்தபோது,
தொத்து உறு கனலின் வீழ்ந்த பஞ்சு எனத் தொலையும் தன்மை!
ஒத்தது : ஒர் இடையூறு உண்டு என்று உணர்வு இடை உதிப்பது உண்டால்.

பொருள் · Meaning in Tamil

அத்த நீ - அத்தனே நீ; அரக்கர் தான் அவுணரே தான் - அரக்கர் என்றாலும் அவுணர்களே என்றாலும்; எத்தனை உளர் என்றாலும் - எத்தனை பேர் என்னை எதிர்த்துப் போர் செய்ய உள்ளார் எனினும்; யான் சிலை எடுத்தபோது - நான் வில்லை எடுத்த சமயத்தில்; தொத்துறு கனலின் வீழ்ந்த பஞ்சு என - தொகுதியாகப் பெருகி எரியும் நெருப்பில் விழுந்துவிட்ட பஞ்சு போல; தொலையும் தன்மை - தோற்று அழிந்து போகும் தன்மையை; உணர்தி அன்றே - தெரிந்திருக்கிறாய் அல்லவா?; ஒத்தது ஓர் இடையூறு உண்டு என்று - என் போர்த்திறமைக்கு ஈடாக எழக்கூடிய இடையூறு உண்டு என; உணர்விடை உதிப்பது அன்று - என் உணர்விலே எழுவதில்லை.

ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. "My dear one! you know, do you not, that demons or asuras,
  2. however many there may be, when I take up my bow
  3. perish like cotton fallen into a spreading fire!
  4. The thought that any obstacle could match that does not arise in my mind."

What the poem says

Irāmaṉ speaks to Ilakkuvaṉ. Whether demons or asuras, and however many, they are consumed like cotton dropped into a blazing fire once he takes up his bow. He cannot imagine any obstacle that could stand against him in battle.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'atta! nī uṇarti aṉṟē arakkartāṉ, avuṇarētāṉ,
ettaṉai uḷar eṉṟālum, yāṉ cilai eṭuttapōtu,
tottuṟu kaṉaliṉ vīḻnta pañcu eṉat tolaiyum taṉmai!
ottatu: ōr iṭaiyūṟu uṇṭu eṉṟu uṇarviṭai utippatu aṉṟāl.