கம்பராமாயணம் 9411 · யுத்த 30.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
காக்குநர் இன்மை கண்ட கலக்கத்தால் - தங்களைக் காப்பவர்கள் எவரும் இல்லை என்று உணர்ந்த கலக்கத்தினால்; கவியின் சேனை - குரங்குப் படையில் உள்ள வீரர்கள்; போக்கு அறப் போகி - புகலிடம் இல்லாமல் ஓடி; தம்தம் உறைவிடம் புகுதல் உண்டு - தத்தம் வாழும் இடங்களை அடைய நேரிடும் (அப்படி அவர்களைக் கதியற்றவர்களாக்குவது நமக்கு இழுக்கு); இப்படையை - இந்த அரக்கர் சேனையை; தாக்கி முற்றும் தலைதுமிப்பளவும் - எதிர்த்துத் தாக்கி முழுவதையும் தலைகளைத் துண்டித்து வரும் வரை; தாங்கி - பாதுகாத்து; ஆங்கு - அந்த வானரர் இருக்கும் இடத்திற்கு; நிருதர் நெருக்குவார் - அரக்கர்கள் நெருக்குவாராகி; நெருங்கா வண்ணம் - குறுகாதபடி; நீக்குதி - அரக்கர் சேனை வீரர்களை நீக்குவாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- "In their dismay at seeing no one to protect them, the monkey army
- may flee with nowhere left to go and creep back to their own dwellings;
- until I have attacked this host and cut off every head, guard them
- and drive the demons off, so that those who press on cannot come near them there."
What the poem says
Irāmaṉ's concern is for the monkeys. Feeling unprotected, they may scatter helplessly back to their homes. So while he attacks the demon army and beheads it to the last warrior, Ilakkuvaṉ is to stand guard over the monkeys and keep the demons from closing in on them.