கம்பராமாயணம் 942 · பால 14.56
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
திமிர மா உடல் - இருள் போன்ற கரிய நிறமுடைய காட்டுப் பன்றிகள் (தம்) உடலிலே; குங்குமச் சேதகம் - மகளிர் ஊடலில் அழித்தெறிந்த குங்குமச் சேறு; திமிர - நிரம்பியதனால்; மாவொடும் சந்தொடும் - (அச் சேறு நீங்கும்படி) மாமரத்திலும், சந்தன மரத்திலும்; தேய்க்கும் - (தம் உடம்பை) உராயச் செய்யும்; அமரர் மாதரை - (அந்த இடத்தில்) தேவ மாதரை; ஒத்து ஒளிர் அம் சொலார் - ஒப்ப விளங்கும் இனிய சொல்லையுடைய மகளிர்; அமர மா தாரை - பொருந்தியிருப்பதால் அந்தப் பெரிய மலை நிலமானது; அவ் வானமே ஒத்தது - தெய்வப் பெண்கள் தங்கும் அந்த வானுலகம் போன்றது.
கரும் பன்றி தன் உடலில் பட்ட குங்குமச் சேற்றைப் போக்குவதற்காக மாமரத்திலும் சந்தன மரத்திலும் தேய்க்கும். தேவ மங்கையரை ஒத்த பெண்கள் அங்கு வாழ்வதால் அம் மலை தேவருலகம் போன்று இருக்கும் என்பதாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The boars, dark as night, when the saffron mud on their bodies
- smears them all over, rub themselves against mango trees and sandal trees;
- and because women of lovely speech who shine like the women of the immortals
- dwell there, that great land was like the heaven itself.
What the poem says
Another verse built on repeated sounds: timira mā, "beasts dark as night", becomes timira, "smearing", and amara mātarai, "the women of the gods", becomes amara mā tarai, "since they dwell there, the great land".
Black wild boars wallow in the saffron paste that the celestial women wash off or throw away in their lovers' quarrels. They then rub against mango and sandal trees to scrape it off. Because women as lovely as goddesses live there, the mountain is like heaven.