கம்பராமாயணம் 943 · பால 14.57
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மாசுணம் - பெரும் பாம்புகள்; பேர்அவாவொடு - (இரையை விரும்பியதனால்) மிகு விருப்புடன்; பேர - பெயர்ந்து செல்வதனால், வே பேர - மூங்கில்கள் அடி பெயர்ந்து இற்றுவிழ; ஆவொடு மா சுணம் பேர - (அது கண்டு அஞ்சிய) காட்டுப் பசுக்கள் ஓடவும், (அதனால் எழுந்த) பெரும் புழுதி பறக்கவும் (ஆயின); அருவி - (அம்மலையில் உள்ள) நீரருவிகள்; ஆர ஆரத்தினோடும் - மிகுதியான முத்துக்களோடும்; மருவி - கலந்து; ஆரவாரத்தின் ஓடும் - பேரொலியுடன் ஓடிக் கொண்டிருக்கும்.
மலையின் ஒருபுறத்தில் புழுதி பறக்கின்றது. மற்றொரு புறத்தில் அருவி ஓடுகின்றது. இவ்வாறு மலையின் சிறப்புக் கூறப்படுகிறது. வே: மூங்கில். சுணம்: சுண்ணம். புழுதி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the pythons move off in great hunger, the bamboos are uprooted;
- the wild cattle flee, and thick dust rises;
- and mingled with abundant pearls,
- the waterfalls run roaring.
What the poem says
A yamakam verse: the first two lines, and the last two, use almost the same syllables split in different ways.
Huge pythons slide off hungrily after prey, and bamboos are torn up by the roots as they pass. The wild cattle stampede in fear, raising clouds of dust. Elsewhere on the mountain the waterfalls thunder down, carrying pearls with them.