கம்பராமாயணம் 944 · பால 14.58
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
புகலும் வாள் அரிக்கு - சிறப்பித்துச் சொல்லும் வாள்போல் கொடிய சிங்கத்தையொத்த; அண்ணியர் பொன்புயம் - ஆடவர்களின் அழகிய தோள்களில்; வாள் அரிக் கண்ணியர் - ஒளிமிக்க செவ்வரி பரந்த கண்களையுடைய பெண்களின்; பூண் முலை - பூண் அணிந்த தனங்கள்; புகலும் - சேர்ந்த அளவில்; அகிலும் ஆரமும் - (மார்பில் அணிந்த) அகில் குழம்பும் சந்தனக் குழம்பும்; ஆர அங்கு ஓங்கும் - நிறைந்து அத்தோள்களில் சிறப்பாக விளங்கும்; அகிலும் - (புயத்திற்கு ஒப்பான) அம் மலையிடங்களிலும்; ஆரமும் மாரவமும் - சந்தன மரங்களும், குங்கும மரங்களும்; கோங்கும் - கோங்கு மரங்களும் (பொருந்தியிருக்கும்).
மாதர் தம் கணவரைத் தழுவுகையில் அவர்கள் அணிந்த அகிலும் ஆரமும் ஆண்களின் தோள்களில் சேர்ந்து மிகச் சிறக்கும் என்பது. வேறு உரை: வாள் அரிக் கண்ணியர்: ஒளி பொருந்திய வண்டுகள் மொய்க்கும் மாலை சூடிய வீரர் என்றும் உரைக்கலாம். மரவம்: குங்கும மரம். மாரவம் - நீட்டல் விகாரம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On the golden shoulders of men who are like the famed fierce lion,
- when the jewelled breasts of the women with bright, red-streaked eyes press close,
- aloe paste and sandal paste gather thick and shine there;
- and on the mountain grow aloe, sandal, maravam and kōṅku trees.
What the poem says
Again the second line of each pair echoes the first in sound. When the women embrace their lion-like husbands, the aloe and sandal paste on their breasts rubs off and shines on the men's shoulders.
In the same words, the mountain, which is like those shoulders, is covered with aloe-wood, sandal, saffron and kōṅku trees. One alternative reading takes the "bright-eyed ones" to be warriors wearing garlands thick with bees.