கம்பராமாயணம் 945 · பால 14.59

Section பால காண்டம் / 14. வரைக்காட்சிப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
பாட வேறுபாடு · Project Madurai reads
1துன் அரம்பை நிரம்பிய தொல்வரை
துன் அரம்பையர் ஊருவில் தோன்றும் ஆல்;
கின்னரம் பயில் கீதங்கள் என்னலாம்
கின்னரம் பயில்கின்றனர் ஏழைமார்.

பொருள் · Meaning in Tamil

தொல் வரை - பழைய அந்த மலையில்; துன் அரம்பை - நெருங்கி வளர்ந்த வாழைகள்; நிரம்பிய - நிரம்பியவை; துன்னு அரம்பையர் - (அங்கு) வந்துள்ள தெய்வப் பெண்களின்; ஊருவின் தோன்றும் - தொடை போலத் தோன்றுவன (அங்கு); ஏழைமார் - மாதர்கள்; கின்னரம் பயில் - கின்னரம் என்ற தேவ சாதியார் பாடுகின்ற; கீதங்கள் என்ன - இனிய பாடல் என்று சொல்லும்படி (அந்த மலையில்); இன் நரம்பு - யாழினை; அயில்கின்றனர் - மீட்டுகின்றார்கள்.

மகளிரின் தொடைக்கு உவமையாகும் வாழை இங்கே உவமேயமாகவும், தொடை உவமானமாகவும் சொல்லப்பெற்றன - எதிர்நிலையுவமையணி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. On that ancient mountain the plantains crowded thick there
  2. look like the thighs of the heavenly nymphs who come there;
  3. and as if they were songs the Kinnaras sing, there
  4. the young women play the sweet strings.

What the poem says

The verse plays on arampai, which means both "plantain" and "celestial nymph". Poets usually compare a woman's smooth thighs to plantain stems. Here the comparison is turned around: the mountain's plantain trees look like the thighs of the nymphs.

Meanwhile the women of the place play the lute so sweetly that it sounds like the songs of the Kinnaras, the heavenly musicians.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tuṉ arampai nirampiya tol varai
tuṉ arampaiyar ūruviṉ tōṉṟumāl;
kiṉṉaram payil kītaṅkaḷ eṉṉa, āṅku
iṉ narampu ayilkiṉṟaṉar ēḻaimār.