கம்பராமாயணம் 946 · பால 14.60
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மா கடம் மா - பெரிய காட்டிலுள்ள மாமரங்கள்; ஊறு உற - சேதம் அடையும்படி; ஊங்கு எலாம் - அம் மலையிடங்களில் எல்லாம்; ஊறுமா - மேன்மேல் சுரக்கும்படி; கடம் மா மதம் - யானைகளின் மதநீர்; ஓடும் - பெருகி ஓடும் (அந்தப் பெருக்கால்); ஆறு சேர் வனம் - வழிகளில் திரண்ட காட்டிலுள்ள; ஆ வரை ஆடும் - ஆச்சா மரமும் மூங்கில்களும் (வேர் அறுந்து) அசைந்தாடும்; யாறு சேர்வன - அந்த மலையாறுகளில் நீருண்ணச் செல்பவை; வரை யாடும் மா - மலையாடுகளும் மற்றைய மிருகங்களுமாம்.
காட்டு மரங்கள் சேதம் அடையும்படி யானை மதநீர் பாய்ந்தது. அம் மதத்தால் ஆச்சா முதலிய மரங்கள் வேர் பறிந்து ஒரு புறத்தில் வீழ்கின்றன. மற்றொருபுறம் நீர் உண்ணும்படி மலையாறுகளில் வரையாடு முதலிய காட்டு விலங்குகள் செல்லுகின்றன என்பது - தொடர்பு உயர்வு நவிற்சியணி.
ஆங்கிலம் · English translationAI
Translation
- So that the mango trees of the great forest are damaged, everywhere there
- the musth of the elephants wells up more and more and flows;
- the ācā trees and bamboos of the forest along the paths sway, uprooted;
- and those that go down to the streams are the mountain goats and other beasts.
What the poem says
Another yamakam verse. So much musth fluid pours from the rutting elephants that it runs in streams. It damages the mango trees of the forest and loosens the roots of ācā trees and bamboos until they sway and fall.
Elsewhere, mountain goats and other wild animals come down to the hill streams to drink. The flood of musth is hyperbole.